வெள்ளி, அக்டோபர் 14, 2011

இவ்வளவு தான் வாழ்க்கையா..?!

வாழ்க்கை - சந்தோஷமாக ஒவ்வொரு நொடியும் அனுபவித்து உற்சாகம் குன்றாமல் வாழவேண்டியது. சுதந்திரத்தில் பறவையாகவும் பொருள் தேடலில் எறும்புகள் போலவும், அனுபவித்தலில் வீட்டு செல்லப் பிராணிகள் போலவும் நாம் வாழும் வாழ்க்கை இருக்க வேண்டும். அப்படி இருக்கிறதா என்ன??

பள்ளிக்காலம் முழுக்க பெற்றோருக்காக, கல்லூரி காலம் முழுக்க வேலைக்காக , பின் எஞ்சி யுள்ள காலம் முழுவதும்?! -  பணத்திற்காகவா??
எதோ ஒரு வெளிநாட்டு நிறுவனம் நம்மை  வைத்து நம்மை யறியாமல் நம் திறமைகளை உறிஞ்சி பல லட்சங்களை சம்பாதிக்கிறது. அந்த லட்சத்திலிருந்து கிடைக்கும் ஒற்றை இலக்க சதவிததிற்காகவா  இரவும் பகலும் அல்லாடுகிறோம்?


ஆயிரங்களில் சம்பாதித்து படித்த முதலை எல்லாம் எடுத்து பின் அந்த ஆயிரங்களை லட்சமாக்கி அந்த லட்சங்கள் கோடிகளை எட்டும் வரை கண் மூடி உழைத்து விட்டு நிமிர்ந்து பார்க்கும் போது நரையோடிக்கொண்டிருக்கும். எஞ்சி நிற்பதென்னவோ வருமான வரி கழிவிற்காக நாம் போட்டு வைத்திருந்த காப்பீடுகளும் முதலீடுகளும் தான்.

மகிழ்ச்சி என்பது வார இறுதியில் போகும் சினிமா விலோ , பொழுது போக்கு  பூங்காவிலோ, மாத  இறுதியில் போகும் பார்ட்டி யிலோ கிடைக்காது. ஏறத்தாழ இன்று அனைவரும் ஆர்பரிபிலேயே குதூகலம் அடைகின்றனர். மிரட்டும் ஒளி விளக்குகள்,  இரைச்சல் இசை, நவ நாகரிக கூட்டம், மற்றும் பல. அதில் நிறைவடைகிறதா உங்கள்  மனம்? அதிகாலை தலை வலியும், அடித்துப் போட்ட உடலுமே மிச்சம். இது  ஏதோ இன்றைய (நவ நாகரிக) சாமியார்களின் பிரசங்கம் மாதிரி இருக்கிறது என எண்ண வேண்டாம். உண்மையில் அவர்கள் கூறுவது போல, தேடல் தான் வாழ்க்கை. ஆனால் அது ஒரு போதும் பணத்தேடலாகி விடக் கூடாது.


அதிகாலை மங்கிய வெளிச்சத்தில், நிறைவாக ஒரு நடை, அவ்வப்போது எடுத்து பார்க்க நம்பர்களின் நினைவுகள் கிறுக்கல்களாக, பார்த்து பார்த்து செய்யும் உணவுகள், மிதவேகத்தில் ஊர்ந்து செல்லும் பயணங்கள், நம் பார்வையிலேயே நம்  ஸ்பரிசத்திலயே வளரும் வீட்டு செடிகள், அவசரமின்றி கிளம்பும் திங்கட்கிழமை, ஆவலுடன் எதிர்பார்க்கும் வெள்ளிக்கிழமை கோவில் மணி ஓசைகள், கைக்குட்டையில் நாமே போடும் தையல் பூக்கள், அறைக்கதவில் ரசனையோடு நாம் வரைந்திருக்கும் ஓவியங்கள், தினசரி யில் வரும் பொன் மொழிகள், கவிதைகள், நாள் பழங்கள், விளம்பரங்களில் வரும் குழந்தைகளின் கொஞ்சு மொழிகள், ஞாயிறு சிறப்பு நிகழ்ச்சிகள், அனுபவித்து செய்யும் வீட்டு வேலைகள், ரசித்து செய்யும் வீட்டு அலங்காரங்கள், அடிக்கடி நினைவு கூறும் பழைய புகைப்படங்கள், வயதானவர்களோடு பேசும்போது நமக்கே அந்நிய மாகி விடும் நம் உரக்கப்பேச்சுகள், 'அட' போட வைக்கும் குழந்தைகளின் பெரிய மனுஷத்தன மான பேச்சுகள், வாவ் சொல்ல வைக்கும் சாலை ஓர பூக்கள், எண்ணற்ற  ஆச்சர்யங்கள் இருப்பது தானே வாழ்க்கை??


இப்போதெல்லாம், நம் விருப்பங்களை விட நம்மை சுற்றி இருப்பவர்களின் விருப்பங்களையே மதிக்கிறோம், உடை விஷயத்திலும் சரி, கொண்டாட்டங்களிலும் சரி.ஏதோ ஒரு உடை அது நமக்கு பிடிக்காவிடினும் 'Trend' என்ற பெயரில் அதையே நமது விருப்பமாக்கிகொள்கிறோம். இங்கே தான் நம் விருப்பத்திற்கும் நம் வாழ்க்கைக்கும் இடையே ஓர் இடைவெளி ஏற்படுகிறது.

 அந்த இடைவெளியில் தான் ஊடகங்கள் நுழைந்து சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கின்றன. நிறைய சமயங்களில் விளம்பரங்களின் பின்னே நாம் ஓடுகிறோமா? என்ற எண்ணம் தோன்றும். எது எப்படியோ, நொடி முள்ளோடு ஓடாமல், இனியேனும் மணி முட்களோடு ரசித்துக்கொண்டே துரத்தி விளையாடலாம்.. நான் மிகவும் ரசித்த விளம்பரத்தில் வரும் வாசகம், முத்தாய்ப்பாக, 

" How much you earn should not decide how much you smile! "

6 கருத்துகள்:

  1. நீங்கள் சொல்வது ஒரு பக்கம் இருக்கட்டும்.நியாயமானதே.ஆனால் பணம் இல்லாமல் அவதிப்பட்டவனுக்கு இந்த சின்ன சின்ன சந்தோஷங்கள் இனிமையாக தெரிவதில்லை.பணம் சம்பாரிப்பதே லட்சியாமாக திரிகிறவனுக்கு போதுமென்ற எண்ணம் வருவதில்லை.அவனிடமும் இந்த சந்தோஷம் பெரிதாகத் தெரிவதில்லை.அவனுக்கு நவநாகரீக போழுதுபோக்குகளே கவுரவமாகத் தெரிகிறது.

    பதிலளிநீக்கு
  2. மிகச்சரியாக சொன்னீர்கள்,.. நாகரிகம் என்ற மாயை நம்மிடையே மகிழ்ச்சியின் அர்த்தத்தை வேறு மாதிரி புகுத்தி விட்டது..

    பதிலளிநீக்கு
  3. ரெடி made pant வாங்க செல்லும் பொழுது கடைகளில் எனக்கு பிடித்த பில்ட் வைத்த pant கிடைப்பதில்லை, கேட்டால் trend இல்ல சார் என்கிறான்.. வேறு வழி நம்ம தையல் அண்ணாச்சி கிட்ட போய் நின்னு கிட்டு இருக்கேன்

    பதிலளிநீக்கு
  4. "பள்ளிக்காலம் முழுக்க பெற்றோருக்காக, கல்லூரி காலம் முழுக்க வேலைக்காக , பின் எஞ்சி யுள்ள காலம் முழுவதும்?! - பணத்திற்காகவா?? "
    A big question starts here!!!
    Found no answer???????
    Nice darl...

    பதிலளிநீக்கு