வெள்ளி, ஜூலை 29, 2011

நம்ம ஊரும் மொபைல் போனும் :)

 நம்ம ஊருகள்-ல பாத்திங்கன்னா நான்-ஸ்டாப்-ஆ ஒளிசுட்டே இருக்கற விஷயங்கள் இரண்டு..
  • பண்பலை 
  • கை பேசி யாகிய  செல் போன் 
பெரும்பாலும் நோக்கியா டோன் தான், சில சமயம் "சரவணப் பொய்கையில் நீராடி.." னு பரவசத்தோட ஒலிக்கும். 'அல்லோ' னு தெக்காலா பாத்து பேச ஆரம்பிச்சாங்கன்ன, 'கேக்குல கண்ணு'-னு கஸ்டமர் கேர் அக்கா கிட்டையே ஒரு நிமிஷம் பேசுவாங்க. பேசற சத்தத்துல தென்ன மரத்து காக்கா, குருவி கூட பயந்து ஓடும். அது பதிவு பண்ணப்பட்ட குரல் னு அப்புறம் தான் புரியும். கம்பெனி காரன் னு அசட்டு சிரிப்பு சிரிச்சுட்டு போவாங்க பாருங்க, கொள்ளை அழகு..!!


மாட்டுக்கு கறவை போடறாங்களோ இல்லையோ, தினமும் 15 நிமிஷம் சார்ஜ் 
கரெக்ட் -ஆ போட்ருவாங்க. வயல் வேலை செய்யும்போதெல்லாம் பொறி காகிதத்துல பேக் பண்ணி  முண்டாசுல வச்சுப்பாங்க.

அதுலயும் அந்த ஸ்பீட் டயல் - னு ஒரு அம்சம் இருக்கு பாருங்க,
1 - பொண்ணு வீட்டுக்கு 
2 - மாபிள்ளைக்கு
3 - மகனுக்கு 
4 - பேத்திக்கு.. னு காலெண்டர் ல எழுதி வச்சு மனபாடம் பண்ணி, நர்செரி ரைம்ஸ் மாதிரி அடிகடி சொல்லி காட்டிட்டே இருப்பாங்க, அதுல ஒரு சந்தோசம்.. : ) . அது கரெக்ட் ஆ வேலை செய்யுதா  னு டெஸ்ட் கால் வேற பண்ணி பாப்பாங்க. 


பண்ணயத்து வேலை ஆளுகளுக்கு எல்லாம் போன் வாங்கி கொடுத்து, 'தண்ணி பாஞ்சா மோட்டார் - அ நிறுத்திட்டு வா, மாட்டுக்கு தட்டு  போட்டியா ??,  செவல மாடு தண்ணி குடிச்சுதா??, வெள்ளாட்ட நல்லா கட்டுனியா??, கோழிய அடைச்சிரு...." னு நம்ம ஆளுக போடற உத்தரவு இருக்கே.. வேலை வாங்கறதுல பில் கேட்ஸ் நம்ம கிட்ட பிச்சை கேக்கணும்..

போன் வாங்கின புதுசுல எங்க ஐயா (அப்பா வின் அப்பா), "இதுவும் மோட்டார் விடுற மாதிரி தான், பச்சைய அழுத்தினா பேசலாம், செவப்புன்னா நிறுத்திற்லாம்" னு சொன்னது இன்னும் என் காதுல ஒலிசுட்டே இருக்கு..

போன் பேசவே மாட்டேன் னு பிடிவாதமா இருந்த எங்க ஆத்தா (அப்பா வின் அம்மா), ஒரு நாள் மருத்துவ மனை ல அட்மிட் ஆனப்ப, எனக்கு போன் போட்டு தர சொல்லி பேசின நாளை நான் இன்னும் "மறக்க முடியாத" நாள் னு என் டைரி ல குறிச்சு வச்சுருக்கேன். இப்ப எல்லாம் வாரத்தில் 3 முறை பேசிடுவேன்.

இத படிக்கற நெறைய பேர், அவங்க தாத்தா கோ, பாட்டி கோ, போன் வாங்கி குடுத்திருபீங்க, அடிக்கடி சந்தோஷமா பேசுவிங்க.. என்ன தான் சொன்னாலும், அவங்க ளோட வெகுளி பேச்சும், மழலை பேச்சு தாங்க..



திங்கள், ஜூலை 25, 2011

என் ஆசைகளை அசைபோடுகிறேன் ..


ஒவ்வொருதற்கும் ஆசைகள், கனவுகள் நிறைய இருக்கு.. ஆசைகளுக்கும் கனவுகளுக்கும் ரொம்ப தூரம் வித்தியாசம் இருக்கு. ஏணி வைத்தால் கூட எட்ட முடியாத உயரம். உதாரணத்துக்கு, குழந்தைகளை வைத்து பேசுவோம். இன்றைய குழந்தைகளுடைய ஆசைகள் சட்டுன்னு நிறைவேறிவிடும். ஆனால், கனவுகள்??? தொடர்ந்துட்டு தான் இருக்கு. எதுவரைக்கும்?? அது அவங்களுக்கே தெரியாது..


ஒரு குழந்தை கிடார் கத்துக்கணும் னு சொன்னா ஏத்துக்கற பெற்றோர்கள், தான் கிடாரிஸ்ட் ஆகணும் னு சொன்னா ஏத்துக்கறதில்லை. இங்க தான் ஒவ்வொருத்தரோட கனவுகள் சிதைக்கக்கபடுகிறது. ஆனாலும் அந்தக்கனவுகள் அடி மனசின் ஆழத்தில் புதைந்து போய்விடும் . 



அந்த புதைந்து போன கனவுகளின் விளைவுகள் இப்படி தான் இருக்கும், 
  • சில கனவுகள் மக்கி வேறு சில ஆசைகளுக்கு உரமாகலாம்.
  • சில கனவுகள் இறுகி போய் மதிப்புள்ள வைரமாய் மாறலாம்.
  • சில கனவுகள் பிளாஸ்டிக் மாதிரி, தானும் அழியாம மற்ற கனவுகளையும் செழிக்க விடாமல் செய்யும். 

என்னோட கனவுகள் முதல் இரு விளைவுகளையும் சந்தித்தது. என்னோட கனவுகள் ல மிக முக்கியமானது, பத்திரிகையாளர் ஆகணும்கிறது. ஆனாலும், வேற யாருக்காகவும் இல்லாமல், சூழ்நிலை, சுதந்திரம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, என் ஆசைகளை மனதினுள் புதைத்து விட்டு, M .C .A ., படிக்கிறேன். ஆனாலும் என் கனவு உரமாகி என்னை வலுவாக்கியது. 
 
நான் கணினித் துறையில் இருப்பதால், என் துறை சார்ந்த ஊடகப்பணிகளில் பங்கு பெறுவேன். வலைப்பூ வில் கவிதை கள் மட்டுமே இட்டு வந்த எனக்கு, எதோ ஒரு விஷயம் உந்து சக்தியா இருந்து கருத்துகளையும் பரிமாற வச்சிருக்கு. சில சமயங்களில் பல விஷயங்கள் என்னையும் ஒரு பத்திரிகையாளரா உணர வச்சிருக்கு. அந்த விஷயங்களை இனி எல்லோரிடமும் பரிமாறலாம் னு இருக்கேன். புதைந்து போன ஆசைகள் ஒவ்வொன்றையும் தட்டி எழுப்புங்கள். இனி, இது நம்ம உலகம். பூக்கள் பூத்து குலுங்கட் டுமே.. !!

 

ஞாயிறு, ஜூலை 24, 2011

இது புதுசு (PART II) - ஆர்ப்பரிக்கும் மழைச்சாரல் நினைவுகள்..

.... 
" அப்பொழு திலும் என் கண்ணீர் துளிகளைத் 
தாங்கிட உன் கரங்கள் நீண்டபோது - அதை
நான் என்ன வென்று சொல்ல...??

சிறு பிள்ளையாய் உன் அருகாமைக்கும் 
பச்சிளம் குழந்தையாய் உன் அரவணைபிற்கும் 
ஏங்குவதை  வெக்கத்தை விட்டு எப்படி சொல்வேன்??

வரிவரியாய் பதித்து விட்ட என் ஆசைகளையும் கனவுகளையும் 
என் காதலையும் உன் அருகில் கவிதைகளாய் 
படித்து காட்டவே எத்தனை முறை தவித்திருப்பேன்..



உன் கண்ணில் படும்படி வைத்துவிட்டு 
நீ படிப்பதற்காக திருட்டுத்தனமாய் கவனித்திருப்பேன்..

நீ கவனிக்காமல் செல்லும்போதும் 
ஏமாறிய இதயம் வலித்தாலும் 
இதமாகத்தான் இருந்தது...

அந்த வெள்ளை காகிதத்தில் முழுமையாய் 
நிறைந்திருந்தது நீ மட்டுமே - என்
இதயம் போல..

இப்படி சின்னச்சின்ன ஏமாற்றங்களை 
வேண்டுமென்றே நீ தந்துவிட்டு..
மொட்டை மாடி இருளில் பனி மட்டுமே 
ஊடுருவ முடியும் இடைவெளியில் 
உன் காதருகே படிக்கச் சொல்லி ரசிப்பாயே..



இப்படி சுகமான நினைவுகளுடன் 
தினம் தினம் செத்து பிழைக்கவே விழைகிறேன்..


*******

நோட் : திஸ் பார்ட் இஸ் டெடிக்கேடேட் டு அவர் செகண்ட் செமஸ்டர் தியரி, பிரக்டிகல், ஆடிட் அண்ட் அதர் கோர்செஸ்..

வியாழன், ஜூலை 07, 2011

இது புதுசு...





முதல் படத்துல இருக்கறது இசை இரட்டயர்கள் சபேஷ்-முரளி, அடுத்த படம் தமிழ் நாவல் உலக மன்னர்கள் சுபா, அதெல்லாம் சரி, மூன்றவதா ஒரு படம் இருக்கே.. யாரு பா அது???
வேற யாரு??
நானும் யுவராணி யும் தான்...
சரி அவங்களுக்கும் எங்களுக்கும் ஏனடா சம்பந்தம் னு பாக்க றீங்களா??
நாங்க ரெண்டு பெரும் சேர்ந்து காலேஜ் ல (கிளாஸ் அவர்ஸ் ல தான்) எழுதின கவிதை இதோ..
நான் ஒரு வரி, யுவா ஒரு வரி...
அதுக்கு முன்னாடி யுவா வ பத்தி சொல்லனுமே.. அவளை பற்றி ஒரு தனி இடுகை ல சொல்றேன்.. இபோதை க்கு, இரத்தின சுருக்கமா சொல்லணும் னா, யுவா தான் என் உயிர் தோழி, என் ஆலோசகர், என்னை அடிக்கடி ஆறுதல் சொல்லி , அரவணைத்து, தூண்டி விட்டு, அடிக்கடி இன்ப அதிர்ச்சி குடுக்கற என் செல்ல தோழி... அவளுடைய பதிவுகள், http://www.enuyirthuli.blog.com/http://www.tomysweetmom.blog.com/....

இனி எங்க கவிதை..

முத்து முத்தாக சொட்டியது மழைத்துளி - என் காதலை போல..
என் கள்வனவன் அதில் நனைந்து வந்து சிலிர்த்து கொண்டதில் சிதறியது நீர்த்துளிகள்..

அதில் கண்டு கொண்டேன் என் வாழ்கையின் அர்த்தங்களை..
உலகிலுள்ள அனைத்து வண்ணங்களையும் ஒரே துளியில் கண்டேனே..

உன் முழுமையான காதலைத் தாங்கிய அந்த ஒற்றை துளி யை
 ஏந்திட என்னைஅறியாமல் என் தேகம் 
உன்னை நெருங்குவதை நீ அறிந்தாயோ??


என்னை அறியாமல் உன் வசிய வலையில் சிக்கி கொண்டன என் கண்கள்...
குளிரால் சில்லிட்ட என் விரல்களுடன்
 காதலால் வெப்பமான உன் விரல்கள் உரசுகையில் 
மின்சாரம் பாய்ந்தது என் னுள்...

சளைக்காத தென்றலும் - திகட்டாத மழைச்சாரலும் 
ஒன்றோடு ஒன்று உரசிக்கொள்ள, சிதறிய தீப்பொறியில்...
பொசுங்காமல் பொசுங்கி மீண்டும் உயிர்தெழுகிறேனே - இனி 
ஒவ்வொரு மழை நாளிலும் உன்னை உருகி உருகி நேசிக்கவே..

கலைந்துள்ள உன் கேசத்தை - நான் 
மீண்டும் கலைக்காமல் கலைத்துவிட 
உன் விழிகள் என்னில் பதிவதை 
ஓரக்கண்னால் பார்த்து விட்டு வெட்கத்தில் மூழ்கி 
நான்  தடுமாறியதை நீ அறிந்தாயோ???

இப்படி எத்தனையோ தடுமாற்றங்கள் என்னுள்..
தடுமாறி தடுமாறி தடுக்கி விழுந்தாலும் 
தாங்கிபிடிக்க நீ இருக்கியே என்ற எண்ணத்தில் 
கோடி முறை தடுமாறி தவிக்கிறேன் நான்..



எதனை தவிப்புகள் என்னுள்??
உன் விழிகளை நேராய் சந்திக்கத் 
தடுமாறிய பொழுதுகள் எத்தனை எத்தனையோ..

அத்தவிப்புகளுக்கு சாட்சியாகத் தானோ விண்மீன்களும் ஆமொதிக்கின்றனவோ..
கலங்கிய என் நெஞ்சு கூட்டில் புகுந்து வரும் உதிரம் தான் கண்ணீராக வெளிப்படுகின்றானவோ...??!!!

****

கொஞ்சம் பிரேக் எடுத்துக்கறோமே...

நோட்: திஸ் பார்ட் இஸ் டெடிக்கேடேட் டு அவர் யுனிக்ஸ் அண்ட் சாப்ட்வேர் இன்ஜினியரிங் பேப்பர்ஸ்.. :)

எங்க ஊர் - கோரக்காட்டுபுதூர்

நான் பிறந்தது ஈரோட்ல, வளர்ந்தது கோரக்காட்டுபுதூர் - ல, வளர்ந்துட்டு  இருக்கறது சத்தியமங்கலத்தில் (இப்போ தற்காலிகமா 3 வருஷத்துக்கு).

அதாவது 11.12°N 77.80°E இருக்கற எங்க ஊரோட பெருமைய பாப்போம். நான் படிச்சது ஸ்ரீ சங்கர வித்யாசாலா, சுருக்கமா எஸ்.எஸ்.வி. சிவகிரி ஒரு சின்ன டவுன். நான் படிக்கும் போது ஸ்பெஷல் னா, செல்வம் கூல் ட்ரிங்க்ஸ், இப்போ சூர்யா பேக்கரி, ஆதவன் மெஸ். கோவில் னா வேலாயுதசுவாமி கோவில், சித்திரை ல தேர் வரும் அது ரொம்ப விசேஷமா இருக்கும்.




 முன்னாடி எல்லாம் வருஷம் தவறாம போவேன், இப்ப பெரிய படிப்பு எல்லாம் படிக்கறது னால போக முடியறுதில்லை. ஆனாலும் அம்மா, தம்பி எல்லாம்  போறதுனால அலமாரி ல வைக்க பொம்மை, வால் போஸ்டர், வளையல் னு ஏதாது கிடைக்கும். ரங்கநாதன்  தெருவே எங்க ஊர்ல தான்னா பாத்துகோங்க (கொஞ்சம் ஓவர் ஒ ??!!). நாடகம், ஆர்கெஸ்ட்ரா னு ஒரே கலக்கலா இருக்கும்.

எங்க ஊர்ல தீரன் சின்னமலை சிலை இருக்கு. கம்பிரமா இருக்கும். அது எனக்கு ரொம்ப பிடிக்கும். சிவகிரி ல இருந்து ஏழு கி.மீ. ல எங்க ஊர் கோரக்காட்டுபுதூர் இருக்கு. 




ரொம்ப பசுமையான ஊருங்க. மஞ்சள், கரும்பு, தென்னை, குச்சி கிழங்கு, கடலை, நெல், எள் தான் முக்கியமான சாகுபடிகள். கற்பக விநாயகர் கோவில் ஒன்னு இருக்கு எங்க ஊர்ல. அது போக மேட்டுசாமி கோவில் ஒன்னு இருக்கு. மாசம் மாசம் விநாயகர் கோவில் ல சங்கடற சதுர்த்திக்கு விசேஷமா இருக்கும். அப்புறம் சித்ரா பௌர்ணமி னா மையாரு பூஜை நடக்கும். அந்த நாள் ல, மதியம் மூன்று மணி வரை வெயிட் பண்ணி, ரெண்டாவது பந்தில சாப்பிடற தெல்லாம் தனி சுகம் ப்பா.



சின்னதா ஒரு பால் சோசைடி, ஒரு பயணிகள் நிழல் குடை, அதுல வர தினமலர் பேப்பர், வழியெல்லாம் தென் படுற கிணறுகள், ட்ரான்ஸ்பார்மர் கள், ரோடு ல காஞ்சு போய் கிடக்கின்ற மாட்டு சாணம், அங்கங்க போற மண் பாதைகள், எருக்களை செடிகள், வீட்டுக்கு வீடு இருக்கற முல்லை கொடிகள், ரோஜா செடிகள், அம்மா னு கத்தற மாடுகள், எருமைகள், கண்ணு குட்டிகள், ஆடுகள், அக்குவாபினா பாட்டில் ல கெணத்து தண்ணி கொண்டுகிட்டு வேலைக்கு போற ஜனங்கள், டிவிஎஸ் எக்ஸ்ஸல் ல சீமை பில், செம்மண் தலை கொண்டு போற மாமா கள், பெரியப்பா கள், சித்தப்பா கள் னு நெறஞ்சு இருக்கற ஊரு தாங்க எங்க ஊரு.



சின்ன செயற்கை தனம் கூட இல்லாமல், இயற்கையா, பசுமையா, ஏதோ ஒரு பந்தத்தோட சிநேகமான ஊரு தாங்க எங்க ஊரு.



லீவ் ல வீட்டுக்கு போன வழி எல்லாம் எத்தன நாள் லீவ் னு கேக்கற பரிச்சயமான சில சமயம் பரிச்சயம் ஆகாதவங்க, ஹாஸ்டல் சாப்பாடு பரவா இல்லையா னு கேக்கற உறவுகள், ரெண்டு மணிக்கு வர ஐஸ்காரர், எப்பவாச்சும் வர பஞ்சு மிட்டாய், வெள்ளி கிழமை வர பொறி காரர், நான் ஸ்கூல் படிச்சப்பவே எனக்கு ப்ரோமோசன் கார்டு கொடுத்த, இன்னும் என் தம்பிக்கும் கொடுக்கற அதே போஸ்ட் மேன், காலைல ஏழரை க்கு தூக்கு போசிஓட வேலைக்கு போற ஜனங்கள், ஜோடி ஆ பக்கத்துக்கு ஊருக்கு வேளைக்கு போறவங்க, மதியம் நான் கொண்டு போற மொக்க டீ க்கே, 'கொங்கு பொடிசு டீ தான் சூப்பர் னு' சொல்லிட்டு வேலை செய்ற மக்கள், நீங்க எதுக்கு வெயில் ல வரிங்க? அம்மா எங்க னு கேக்கற அந்த அக்கறை, கரிசனம் சத்தியமா வேற எங்கியும் கிடைக்காதுங்க.



வாங்க, ஒரு நடை வந்துட்டு போங்க....!!

திங்கள், ஜூலை 04, 2011

புதிதாக பிறக்கிறேன் நான்.. (அட சூப்பரப்பு..!!)

வணக்கம்...

நான் வலைதளம் ஆரம்பிச்சு கிட்டதட்ட 2  வருஷம் ஆச்சுங்க. ஏதோ நான் அப்பப்ப எழுதின கவிதை எல்லாம் போட்டு இடுகையும் கொண்டு வந்துட்டேன். ஆனாலும் நெறைய எழுதனும் னு ஒரு ஆர்வத்துல (ஆர்வ கோளாறு னே வச்சுக்கலாம்) நானும் கச்சேரிய ஆரம்பிக்கறேன்...
களை கட்டும் னு நெனைக்கறேன்.. வாங்க சேந்து குத்தலாம்.. ;)