திங்கள், மார்ச் 05, 2012

விலைகளுக்கா விலைபோகிறோம்

'பசுமைத் தாயகம் அமைப்போம்', 'மரங்கள் பூமியின் கொடைகள்', 'ஓசோன் மண்டலம் காப்போம்', 'வாய் இல்லா ஜீவன்களின் நலம் பேணுவோம்' என்று முண்டாசு அணிந்த ஓவியனின் கிறுக்கல்களைத் தாங்கி நின்ற விளம்பரத்தட்டிகளின் காலமெல்லாம் 'ஆசை' சாக்லேட்  போல இருப்பிடம் தெரியாமலே பொய் விட்டன. அதற்காக சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இம்மனித குலம் விழித்துக்கொண்டுவிட்டது என்று அர்த்தம் இல்லை. விழிப்புணர்வுத் தட்டிகளைவிட விளம்பரத்தட்டிகள் நம்மை வசீகரித்து விடுகின்றன.

'பிளாஸ்டிக் ஐத் தவிர்ப்போம்' என்பதை அலட்சியப்படுத்தும் நாம், eco-friendly, மண்ணில் புதைத்து வைத்தால் மக்கக்கூடியது, வெளிநாட்டில் உற்பத்தியானவை என்று 20 ரூபாய்க்கு விற்கும் டப்பாவை 200 ரூபாய்க்கு விற்றாலும் வாங்கிக்கொள்கிறோம்.

மண்வளம் காப்பதில் முக்கியப்பங்கு வகிக்கும் கரையாங்களையும், ஒட்டுண்ணிகளையும் HIT அடித்து ஒழித்துவிட்டு, மண் புழு உரம், இயற்க்கை உரம், organic என்றெல்லாம் கூறி குளிரூட்டி விற்கும் காய்கறிகளை அல்லவே நாடிச்செல்கிறோம்?

தெருவிற்கு தெரு அலையும், தினமும் நம் கண்ணில் படும் நாய்களுக்கும், மாடுகளுக்கும்  உணவிடவோ பாதுகாக்கவோ தோன்றுவதில்லை. ஆனால், மரக்கழிவுகளில் செய்தது, மிருகங்களைக்காக்க உங்கள் பங்கை அளியுங்கள்  என்று 5000, 6000 ரூபாய்க்கு விற்கும் காலணிகளை வாங்க ஆர்வம் காட்டுகிறோமே.. ஏன்??








தெருமுனையில் விற்கும் கற்றாழையில் தூசு படிந்திருக்கும் என்று ஒதுக்கி  விட்டு, கிராபிக்ஸ் கற்றாழையைக் காட்டி, டப்பிங் மொழியில் பேசி விற்பனை செய்யும் ஷம்பூவையும் கிரீமையும் வாங்குவதிலேயே திருப்தி அடைகிறோம்.


மூத்த தலைமுறையினருக்கு மாரடைப்பு வந்தால், அவர்களுக்குத் முக்கியத்தேவை மகன்/மகள்/பேரப்பிள்ளைகளின் அருகாமையும் அன்புமே தவிர, லிட்டர் 200, 300 ரூபாய்க்கு விற்கும்  ஐரோப்பிய சமையல் எண்ணெய் அல்ல.


இயற்கை கிருமி நாசினியான சாம்பிராணியை அலர்ஜி என்று ஒதுக்கி விட்டு , 35,000 ரூபாய்க்கு Ozone-free AC வாங்குவதே இப்பொழுது  கௌருவமாக கருதப்படுகின்றது. 


தாத்தாக்கள் வைத்திருக்கும் மஞ்சள் பைகள் கேலியாகப்பட்டது, ஆனால் ஷாப்பிங் மால் களில் 100 ரூபாயேனும் அதிகம் குடுத்துத்தானே துணிபைகளையும், காகிதப்பைகளையும் வாங்கி வருகிறோம். உண்மையில் நாம் தான் கேலிப்பொருள்களாகி வருகிறோம்.


இன்றெல்லாம் 'சுற்றுச்சூழல் விழிப்புணர்வு' விளம்பரங்களே ப்ளெக்ஸ் போர்டு களில் தான் வருகிறது.

இப்பொழுதெல்லாம்  குழந்தைகள் பல்லாங்குழியும் கிட்டிப்புல்லும் விளையாட சம்மர் கிளாஸ் போகத்தொடங்கி விட்டார்கள். இதை நாகரிக வளர்ச்சி என்று சொல்வதை நிச்சயம் ஏற்றுக்கொள்ள முடியாது.பார்க்கலாம், இந்த வளர்ச்சி எங்கே செல்கிறது என்று...




11 கருத்துகள்:

  1. நிதர்சனம் நிழலாடும் எழுத்து நடை!!!

    Keep on rocking!!!!!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி..
      தொடர்ந்து நீங்கள் தரும் கருத்துரைக்குக்கும் நன்றி..

      நீக்கு
  2. //மண்வளம் காப்பதில் முக்கியப்பங்கு வகிக்கும் கரையாங்களையும், ஒட்டுண்ணிகளையும் HIT அடித்து ஒழித்துவிட்டு, மண் புழு உரம், இயற்க்கை உரம், organic என்றெல்லாம் கூறி குளிரூட்டி விற்கும் காய்கறிகளை அல்லவே நாடிச்செல்கிறோம்?////

    உண்மைதான்... இயற்கை விவசாய முறைகளை நடைமுறைப் படுத்துவதில் சிக்கல்கள் பல உண்டு.... உதாரணத்திற்கு நெட்டை ரகத் தென்னைகளை நாட்டினால், வேதியியல் பொருட்களை அதிக அளவு உபயோகிக்கத் தேவையில்லை. ஆனால், நானே மகசூலை மனதில் கொண்டு குட்டை ரக தென்னைகளை நடுகிறேன்: மேலும் அதற்கு கலைக் கொல்லி முதல், உரம் முதல் மற்றும் பூச்சிக் கொல்லி வரை வேதிப் பொருட்களே...

    :-(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த உண்மையை நானே ஒற்றுக்கொள்கிறேன்.. பூச்சிக்கொல்லி மருந்தின் நெடி தாங்காமல், காய்ச்சல் வந்த காலங்களெல்லாம் உண்டு..
      நாம் எப்படி விவசாயம் செய்தாலும் நஷ்டம் தான் ஏற்படுகிறது, இன்றைய காலகட்டத்தில்..

      நீக்கு
  3. இன்றெல்லாம் 'சுற்றுச்சூழல் விழிப்புணர்வு' விளம்பரங்களே ப்ளெக்ஸ் போர்டு களில் தான் வருகிறது

    :-)

    பதிலளிநீக்கு
  4. தெருமுனையில் விற்கும் கற்றாழையில் தூசு படிந்திருக்கும் என்று ஒதுக்கி விட்டு, கிராபிக்ஸ் கற்றாழையைக் காட்டி, டப்பிங் மொழியில் பேசி விற்பனை செய்யும் ஷம்பூவையும் கிரீமையும் வாங்குவதிலேயே திருப்தி அடைகிறோம்.

    நானும் இப்படி டப்பிங் மொழியின் பின்னால் தான் சென்று கொண்டிருக்கிறேன்...

    கன்னத்தில் அறைந்ததை பொல் இருந்தது....

    நன்றி....

    பதிலளிநீக்கு
  5. இதை குட்டு என்று நினைத்துக்கொள்ளலாமே.. ??!!

    பதிலளிநீக்கு
  6. மிகவும் எதார்த்தம்!
    அதிலும் இயற்கை சத்து நிறைந்த உணவுகளை மறந்துவிட்டு அருந்திய மாத்திரத்தில் குழந்தைகள் புத்துணர்ச்சி அடைவதாக காட்டப்படும்
    கற்பனை உலகத்தையே நாம் நம்புகிறோம்!

    பதிலளிநீக்கு