திங்கள், நவம்பர் 16, 2009



எனது வலைபக்கத்திற்கு வரவேற்கிறேன்...
வானம் வசப்பட வாழ்த்துகளுடன் .....
சிவா

வாழ்வியலும் அறிவியலும்




கலர் கலராய் பலூன்கள்
மகிழ்ச்சியின் வெளிப்பாடாக
உயர உயர பறக்க வேண்டும்
என எண்ணுகிறது ஒரு சமூகம்....

உயர பறக்காமல் சீக்கிரம் விழனும்
இன்னிக்காவது நாலு காசு பாக்கணும்
என எனுகிறது மற்றொரு சமூகம்.....

பூமிபந்தின் மாறுபட்ட சுழற்சிக்கு
இதை விட வேறு என்ன எடுத்துகாட்டு வேண்டும்?

விஷம் எங்கே இருக்கிறது?




'கலி முதி போச்சு'



'எல்லாம் இதுகள பெத்தவங்கள சொல்லணும்'



'வர வர கோவிலுக்கும் வர முடியறது இல்ல'



'இதுக்கு எதாவது சட்டம் கொண்டு வரணும்



''அது தேவை இல்ல, சட்ட சீர்திருத்தம் கொண்டு வரணும்'



* * * * *



அது வேறு ஒன்றும் இல்லை...



விடுமுறை அல்லாத ஒரு நாளில்



என் நான்கு வயது மூத்த அண்ணனோடு கோவிலுக்கு சென்றிருந்தேன்...



மிகவும் எதார்த்தமாக என் நெற்றி குங்குமத்தை சரி செய்தான்...



அதற்கு சாடுகிறதா இந்த சமூகம்?????


வியாழன், ஆகஸ்ட் 20, 2009

விழி மூடி யோசிக்கிறேன் ...

உனக்காகவே வளர்ந்து விட்ட என் விரல் நகங்கள் ...

உனக்கான என் முத்தங்களை சுமந்த நீ தைத்த சட்டையின் பொத்தான்....

என் பிடியில் சிக்கி தவிக்கும் உன் மூச்சு காற்றை சுமந்த என் தலையணை..

குளியல் அறையில் இருந்தும் சமையல் அறையில் இருந்தும் நீ எனக்கு அனுப்பிய ரகசிய குறுந்தகவல்கள் .....

இவை யாவும்
அந்நிய காற்றில் கரையாதிருக்க...
அடிக்கடி சிணுங்கும் என் கைபேசி உன் குரலிலேயே ....

இப்படி நீயும் உன் நினைவுகளும் மாறி மாறி என்னை ஆக்ரமிக்க
அந்நிய தேசத்தில் என்ன செய்வேன் நான் ??????

திங்கள், பிப்ரவரி 23, 2009

இதற்கு பெயர் என்னவோ...???

அலுவலக கடவுசொல் உன் பெயர்..
மின்அஞ்சல் கடவுசொல் உன் பெயர்...
கோவிலில் அர்ச்சனைக்கும் உன் பெயர்..
என் குறிபேட்டில் உன் பெயர் ...
என் நினைவிலும் உன் பெயர்..
என் நாவிலும் உன் பெயர்...
இப்படி பெயரளவில் உன்னை நான் நேசிக்க
நீயோ மனதளவில் வேறு ஒருவனை நேசிக்கிறாயே....