வியாழன், ஜூலை 07, 2011

எங்க ஊர் - கோரக்காட்டுபுதூர்

நான் பிறந்தது ஈரோட்ல, வளர்ந்தது கோரக்காட்டுபுதூர் - ல, வளர்ந்துட்டு  இருக்கறது சத்தியமங்கலத்தில் (இப்போ தற்காலிகமா 3 வருஷத்துக்கு).

அதாவது 11.12°N 77.80°E இருக்கற எங்க ஊரோட பெருமைய பாப்போம். நான் படிச்சது ஸ்ரீ சங்கர வித்யாசாலா, சுருக்கமா எஸ்.எஸ்.வி. சிவகிரி ஒரு சின்ன டவுன். நான் படிக்கும் போது ஸ்பெஷல் னா, செல்வம் கூல் ட்ரிங்க்ஸ், இப்போ சூர்யா பேக்கரி, ஆதவன் மெஸ். கோவில் னா வேலாயுதசுவாமி கோவில், சித்திரை ல தேர் வரும் அது ரொம்ப விசேஷமா இருக்கும்.
 முன்னாடி எல்லாம் வருஷம் தவறாம போவேன், இப்ப பெரிய படிப்பு எல்லாம் படிக்கறது னால போக முடியறுதில்லை. ஆனாலும் அம்மா, தம்பி எல்லாம்  போறதுனால அலமாரி ல வைக்க பொம்மை, வால் போஸ்டர், வளையல் னு ஏதாது கிடைக்கும். ரங்கநாதன்  தெருவே எங்க ஊர்ல தான்னா பாத்துகோங்க (கொஞ்சம் ஓவர் ஒ ??!!). நாடகம், ஆர்கெஸ்ட்ரா னு ஒரே கலக்கலா இருக்கும்.

எங்க ஊர்ல தீரன் சின்னமலை சிலை இருக்கு. கம்பிரமா இருக்கும். அது எனக்கு ரொம்ப பிடிக்கும். சிவகிரி ல இருந்து ஏழு கி.மீ. ல எங்க ஊர் கோரக்காட்டுபுதூர் இருக்கு. 
ரொம்ப பசுமையான ஊருங்க. மஞ்சள், கரும்பு, தென்னை, குச்சி கிழங்கு, கடலை, நெல், எள் தான் முக்கியமான சாகுபடிகள். கற்பக விநாயகர் கோவில் ஒன்னு இருக்கு எங்க ஊர்ல. அது போக மேட்டுசாமி கோவில் ஒன்னு இருக்கு. மாசம் மாசம் விநாயகர் கோவில் ல சங்கடற சதுர்த்திக்கு விசேஷமா இருக்கும். அப்புறம் சித்ரா பௌர்ணமி னா மையாரு பூஜை நடக்கும். அந்த நாள் ல, மதியம் மூன்று மணி வரை வெயிட் பண்ணி, ரெண்டாவது பந்தில சாப்பிடற தெல்லாம் தனி சுகம் ப்பா.சின்னதா ஒரு பால் சோசைடி, ஒரு பயணிகள் நிழல் குடை, அதுல வர தினமலர் பேப்பர், வழியெல்லாம் தென் படுற கிணறுகள், ட்ரான்ஸ்பார்மர் கள், ரோடு ல காஞ்சு போய் கிடக்கின்ற மாட்டு சாணம், அங்கங்க போற மண் பாதைகள், எருக்களை செடிகள், வீட்டுக்கு வீடு இருக்கற முல்லை கொடிகள், ரோஜா செடிகள், அம்மா னு கத்தற மாடுகள், எருமைகள், கண்ணு குட்டிகள், ஆடுகள், அக்குவாபினா பாட்டில் ல கெணத்து தண்ணி கொண்டுகிட்டு வேலைக்கு போற ஜனங்கள், டிவிஎஸ் எக்ஸ்ஸல் ல சீமை பில், செம்மண் தலை கொண்டு போற மாமா கள், பெரியப்பா கள், சித்தப்பா கள் னு நெறஞ்சு இருக்கற ஊரு தாங்க எங்க ஊரு.சின்ன செயற்கை தனம் கூட இல்லாமல், இயற்கையா, பசுமையா, ஏதோ ஒரு பந்தத்தோட சிநேகமான ஊரு தாங்க எங்க ஊரு.லீவ் ல வீட்டுக்கு போன வழி எல்லாம் எத்தன நாள் லீவ் னு கேக்கற பரிச்சயமான சில சமயம் பரிச்சயம் ஆகாதவங்க, ஹாஸ்டல் சாப்பாடு பரவா இல்லையா னு கேக்கற உறவுகள், ரெண்டு மணிக்கு வர ஐஸ்காரர், எப்பவாச்சும் வர பஞ்சு மிட்டாய், வெள்ளி கிழமை வர பொறி காரர், நான் ஸ்கூல் படிச்சப்பவே எனக்கு ப்ரோமோசன் கார்டு கொடுத்த, இன்னும் என் தம்பிக்கும் கொடுக்கற அதே போஸ்ட் மேன், காலைல ஏழரை க்கு தூக்கு போசிஓட வேலைக்கு போற ஜனங்கள், ஜோடி ஆ பக்கத்துக்கு ஊருக்கு வேளைக்கு போறவங்க, மதியம் நான் கொண்டு போற மொக்க டீ க்கே, 'கொங்கு பொடிசு டீ தான் சூப்பர் னு' சொல்லிட்டு வேலை செய்ற மக்கள், நீங்க எதுக்கு வெயில் ல வரிங்க? அம்மா எங்க னு கேக்கற அந்த அக்கறை, கரிசனம் சத்தியமா வேற எங்கியும் கிடைக்காதுங்க.வாங்க, ஒரு நடை வந்துட்டு போங்க....!!

21 கருத்துகள்:

 1. ///நீங்க எதுக்கு வெயில் ல வரிங்க? அம்மா எங்க னு கேக்கற அந்த அக்கறை

  ஆனா நீ சொன்ன காலம் எல்லாம் இனிமே வராது போல... இப்போ இருக்கிற விவசாயம் அப்படி...

  அருமையான பதிவு...

  பதிலளிநீக்கு
 2. என் சொந்த ஊருக்கு சென்று வந்த நினைவுகளை தந்த உன் வரிகளில் பிடித்தது அனைத்துமே ரசித்தது....

  " லீவ் ல வீட்டுக்கு போன வழி எல்லாம் எத்தன நாள் லீவ் னு கேக்கற பரிச்சயமான சில சமயம் பரிச்சயம் ஆகாதவங்க, "

  பதிலளிநீக்கு
 3. "கோரக் காட்டுப் புதூர்"? பேரைக் கேட்டாலேப் பீதியாகுது.....!!!

  அப்புடி என்னப் பெரியப் படிப்புப் படிக்குறீங்க சாமி..., சத்தியமங்கலத்துல?

  அருமையா எழுதி இருக்கீங்க..!! உள்ளுக்குள்ள ஒரு ஆட்டோக்ராப் சேரன் ஒளிஞ்சிருக்காறு..!!! ஆமா.., புகைப் படமெல்லாம் சொந்தமாக எடுத்ததா? இல்லை என்னைப் போல இணையத்தில் சுட்டதா?

  பதிலளிநீக்கு
 4. MCA பண்றேங்க, இந்த போட்டோ எல்லாம் நானே எடுத்தது...
  எங்க ஊரில் எடுத்தது...

  பதிலளிநீக்கு
 5. அருமையான பதிவு!!! ஏதோ டைரியை படித்தது போல இருக்குங்க...Photograhy-in-tamilதளம் மூலமா தான் உங்க படங்கள பார்த்தேன்...அருமையான பதிவு சிவரஞ்சனி!!!! தொடருங்கள்!!! தொடருகிறோம்...

  பதிலளிநீக்கு
 6. அழகான பதிவு.. அழகான நடை...

  இன்னும் நிறைய எழுதுங்க....

  பதிலளிநீக்கு
 7. உங்கள் ஊக்கத்திற்கு மிக்க நன்றி.. என்னை மேலும் சிறப்பாக எழுத தூண்டுவதே இது போன்ற கருத்துரைகள் தான்..

  பதிலளிநீக்கு
 8. நானும் சிவகிரி வருவதுண்டு...அம்மன் கோவில்....வருடத்துக்கு ஒருமுறையேனும்... அழகான இடம்தான்... உங்க ரைட்டிங் ஸ்டைலும் சூப்பர்... கீப் ராக்கிங்மா!!!!

  பதிலளிநீக்கு
 9. மிக்க நன்றிங்க.. சிவகிரி வந்த அப்டியே எங்க ஊருக்கும் ஒரு நடை வந்துடு போங்க..

  பதிலளிநீக்கு
 10. //Sivaranjani சொன்னது…

  மிக்க நன்றிங்க.. சிவகிரி வந்த அப்டியே எங்க ஊருக்கும் ஒரு நடை வந்துடு போங்க..
  ///

  கண்டிப்பா!!!
  :-)

  பதிலளிநீக்கு
 11. பதில்கள்
  1. இது காரணப்பெயர் அல்ல என்பது எனது எண்ணம்.. அதை ஆராய்ந்தால் மேலும் பல சுவாரஸ்யங்கள் கிடைக்கும் என்று நம்புகிறேன்..

   நீக்கு
 12. அருமையாக உள்ளது நானும் சிவகிரி பக்கம் தானுங்க

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றிங்க.. அப்படியா? மிக்க மகிழ்ச்சி ..

   நீக்கு
 13. I feel like I am back to my Native..
  Good Style of writting...

  Job join panni code epdi adika poringalo theriyathu.. Ana Article nalla try panni irukenga :)

  பதிலளிநீக்கு
 14. Siva, I don't have any words to appreciate you....

  Please keep posting like tis,,,,,, I became a fan of you..

  பதிலளிநீக்கு
 15. Siva, I don't have any words to appreciate you....

  Please keep posting like tis,,,,,, I became a fan of you..

  பதிலளிநீக்கு