சனி, அக்டோபர் 01, 2011

பலப்பம் முதல் பேஸ்புக் வரை..

'பலப்பம்' என்றதும் குழம்ப வேண்டாம். பலப்பம் னா சிலேட் பென்சில். சிலேட் டில் எழுதத் தொடங்கிய நாளிலிருந்து தொடங்குகிறது, மொழியோடு நாம் கொண்டிருக்கும் பயணம்.(பள்ளி  செல்லும் குழந்தைகளிடம் கூட இப்பவெல்லாம் சிலேட் இல்லைங்க. சிலேட் பென்சில் இருக்கான்னு கேட்டுப் பாருங்க. HB ஆ?? 2 HB ஆ? னு கேட்பாங்க.  )
 'A','B','அ','ஆ' என்று ஒற்றை எழுத்தில் தொடங்கிய நம் எழுத்துக்கள், இன்னும் ' ',' ',' ' என்று வளராமலேயே இருக்கிறதா? அல்லது வளர்ந்து முதிர்ந்து விட்டதா என்பது மில்லியன் டாலர் கேள்வி.'வணக்கம்!! நல்லாருக்கிறீங்களா ? வீட்டில் எல்லோரும் சவுக்கியமா? அப்புறம், எப்படி போய்க்கொண்டிருகிறது வாழ்க்கை??' என்று உறவு கொண்டாடிய கரிசனமான உபசரிப்புகளை 'whats up??' என்ற இரு வார்த்தைகளாய் சுருக்கி, அதையே 'watz ap?' என்று அர்த்தமே இல்லாமல் உருக்கி விட்டோம்.

வார்த்தைகள் மட்டுமா சுருங்கி விட்டன? வாழ்க்கையும் தான். பிறந்த நாளில் இருந்து, பொங்கல், தீபாவளி வரை வாழ்த்துக்கள் எல்லாம் இணையத்திலே தான். குறுந்தகவல்கள் கூட சோடை பொய் விட்டன. இணையத்தில் வாழ்த்துக்கள் தட்டச்சு செய்வது கூட இப்போதேல்லாம் குறைந்து விட்டன. பேஸ்புக் இல் like, ட்விட்டரில் share, கூகுளில் +1 என்று ஒரு சொடுக்கில் எல்லாம் முடிந்துவிட்டது. இதுவேண்டுமானால், இணையத்தின் வளர்ச்சியாக இருக்கலாம், ஆனால், வாழ்க்கையின் வீழ்ச்சியே!!


3 ரூபாயிலிருந்து அதிகபட்சம் 150 ரூபாய் வரை வாழ்த்து அட்டைகள் வாங்கி பொங்கல் பானை, கரும்பு, கோலம் எல்லாம் வரைந்து 'பொங்கல் வாழ்த்துக்களை' வித விதமாக எழுதி இப்படிக்கு என்று ஒரு லிஸ்ட் ஐயே எழுதி        கடைசியில் உறையில்  'Open with Smile :) ' என்பதை மறக்காமல் குறிப்பிட்டு பல விதமான தபால் தலைகள் வாங்கி, தாமதமாகி விட்டால் என்ன செய்வது என்ற முன் எச்சரிக்கையோடு தலைமை தபால் நிலையத்திற்கே சென்று அனுப்பிய காலமெல்லாம் மலை ஏறிவிட்டது.

அதுவும் தீபாவளி என்றால் இன்னும் குதூகலம்.வாழ்த்து அட்டைக்குள் சுருள் கேப் வைத்து அனுப்பி அடித்த லூட்டிகள் எல்லாம் பல. தீபாவளி க்கு பட்டாசு வாங்குவதில் ஆரம்பிக்கும், நண்பர்களுக்கும்  நமக்கும் இடையேயான போட்டி. 
அவனிடம் இல்லாத மாதிரி பட்டாசு வாங்க வேண்டும் என்று கடை கடையை ஏறி, மூலை முடுக்கெல்லாம் துலாவி வாங்கி வந்தால், பக்கத்து வீடு பட்டாசு சத்தம் ஊருக்கு வெளியே வரும் போதே கேக்கும். நமக்கு அப்படியே பக்குன்னு ஆய்டும்.

அவசர அவசரமாக பட்டாசு களை பிரித்து வைத்து வெளியே வெயிலில் காய வைத்து, 3 நாளைக்கு தேவையானவற்றை பிரித்து எடுத்து பத்திரப்படுத்தி வைக்க வேண்டும். அப்புறம், போட்டி போட்டுக்கொண்டு பட்டாசுச் சத்தம் விண்ணை பிளக்கும். போட்டி எல்லாம் முதல் நாள் மட்டும் தான், அப்புறம் என்ன, தேர்தல் கூட்டணிக் கட்சிகள் மாதிரி ஒன்னுசெந்துட்டு அடிக்கிற ரவுசு இருக்கே!! இது தாங்க நெஜ தீபாவளி...எப்படியும், தீபாவளி க்கு 5 நாள் லீவ் வரும். அம்மாய் வீட்டில் சிக்கன் , மட்டன் எல்லாம் சாப்பிட்டுவிட்டு தேம்பாய் பேச ஆயிரம் கதைகள் இருக்கும்..

இப்பவெல்லாம் பேஸ்புக் தீபாவளி தான். 2 நாள் லீவ் ல் 'Am going home town 4diwali.. happy diwali guys..' னு Status போட்டுட்டுபோனோம் னா, மத்தாப்பு பிடிக்கிற மாதிரி 4 போட்டோ எடுத்து போட்டுட்டு, ஷங்கர் பேட்டிய பார்த்துட்டு ட்வீட் பண்ணிட்டு , புது ரிலீஸ் படம் பாத்துட்டு, நல்ல சாப்டுட்டு லீவ் முடிஞ்சு status அப்டேட் போடுவோம், "d most wonderful day, dude!! bac 2 wrk'.. அதையும் 10 பேர் like பண்ணுவாங்க.. 

முடியல ங்க.. :(3 கருத்துகள்:

 1. "இப்பவெல்லாம் பேஸ்புக் தீபாவளி தான். 2 நாள் லீவ் ல் 'Am going home town 4diwali.. happy diwali guys..' னு Status போட்டுட்டுபோனோம் னா, மத்தாப்பு பிடிக்கிற மாதிரி 4 போட்டோ எடுத்து போட்டுட்டு, ஷங்கர் பேட்டிய பார்த்துட்டு ட்வீட் பண்ணிட்டு , புது ரிலீஸ் படம் பாத்துட்டு, நல்ல சாப்டுட்டு லீவ் முடிஞ்சு status அப்டேட் போடுவோம், "d most wonderful day, dude!! bac 2 wrk'.. அதையும் 10 பேர் like பண்ணுவாங்க..
  "
  romba correct de...
  marriage invitation E-card...
  innum konja nalla
  Marriage Virtual Reality madhiri vandhurum!!!

  பதிலளிநீக்கு
 2. "'A','B','அ','ஆ' என்று ஒற்றை எழுத்தில் தொடங்கிய நம் எழுத்துக்கள், இன்னும் ' u ',' i ',' r ' என்று வளராமலேயே இருக்கிறதா? "

  You , I , Are ? .. கொஞ்சம் யோசிச்சாத்தான் புரியுதுங்கோ...!! நல்லா எழுதுறீங்க..!!
  தேம்பாய் அப்புடின்னா என்ன அர்த்தம்? @@##?

  பதிலளிநீக்கு
 3. sorry ங்க அது 'தெம்பாய்'..
  மிக்க நன்றி..

  பதிலளிநீக்கு