புதன், ஜூலை 04, 2012

கிளிஞ்சல்களும் மயிலிறகுகளும் - பாகம் 2


திண்பண்டங்களும் தீனிப்பண்டாரங்களும்


Sunfeast - Dark Fantasy, Cadbury - Oreo, Britannia - Good day ஆகியவற்றின் ராயல் சுவையில் லயித்திருக்கிறோம் நாம். தினம் தினம் புதிது புதிதான  flavour-ரோடும், விளம்பர உத்தியோடும், தித்திக்கும் சுவையோடும், பளபளக்கும் உரையோடும் வரும் தின்பண்டங்களுக்கு தான் இன்றைக்கெல்லாம் மவுசு. 3 ரூபாய் Parle-G,  5 ரூபாய் Horlicks biscuit,  10 ரூபாய் krack-jack 
சுவையை மறக்க முடியுமா என்ன?!

சக்திமான் ஸ்டிக்கர் காகவே வாங்கித் தின்று தீர்த்த Parle-G, World Cup என்றால்  என்னவென்றே தெரியாமல் போட்டி போட்டுக்கொண்டு ரன்கள் சேகரித்த Britannia பாக்கெட்டுகள், அப்போது வந்த திருடன்-போலீஸ் விளம்பரத்திற்காகவே வாங்கிய krack-jack, பெப்பெர்மின்ட், லாலி பாப், சவ்வு மிட்டாய், இஞ்சி மரப்பான்.. தித்திக்கும் திகட்டாத நினைவுகள் .. :)
பிஸ்கட், மிட்டாய்கலோடு மட்டுமே நின்று விடுமா எங்கள் கிளிஞ்சல், மயிலிறகு காலங்கள்..??

வீட்டிலிருந்து திருட்டுத்தனமாய் எடுத்து வந்த புளியுடன், மிளகாயும், உப்பும் வைத்து அம்மிக் கல்லில் கொட்டி, ஈர்க்கு மாற்று குச்சியில் சொருகி சப்புக்கொட்டிய புளி லாலி பாப், இடித்த புளியை கொய்யா மர இலையில்  வைத்து சாப்பிட்ட புளி வெற்றிலை,  பொட்டுக் கடலையும் சர்க்கரையும் வைத்து அரைத்து விக்கி விக்கி சாப்பிட்டது, பொறியுடன் நாட்டு சர்க்கரையும் தேங்காயும் கலந்து சாப்பிட்டது, வாழைப்பழத்தை சக்கரம் சக்கரமாக வெட்டி நடுவில் நாட்டு சக்கரையை கிரீம் ஆகவும் வைத்து, நிலக்கடலையை ட்ஸ் ஆகவும் வைத்து சாப்பிட்டது, ரஸ்னா-வை எவர் சில்வர் டம்லரில் ஊற்றி நடுவே ஒரு குச்சியை பொட்டு Freezer-இல் வைத்து ஐஸ் செய்தது ( 2 ரூபாய் ஐஸ் செலவை மிச்சம் செய்யப் போய், வீட்டில் பாதி சர்க்கரை காணாமல் போன கதை வேறு ), நெல்லிக்காயையும், மாங்காயையும் துண்டு துண்டாய் நறுக்கி, மிகாய்ப்பொடி கரைத்த தண்ணீரில் ஊற வைத்து சாப்பிடுவது, வெள்ளரி பீஞ்சினை முக்கால் பாகமாக வெட்டி உள்ளே இருப்பவைகளை குடைந்து எடுத்து விட்டு, உள்ளே நுங்கு, மாதுளை முத்துக்களை நிரப்பி, கோன் ஐஸ் சாப்பிட்டது.. Creative ஆகவும், Decorative ஆகவும் எத்தனை ரெசிபிகள்..!! வாரமலர் சமையல் குறிப்புகளும், DD1 ல் வரும் வசந்த் & கோ வின் ‘சாப்பிடலாம் வாங்க’ வில் கற்றுக்கொண்ட அரைகுறை சமையலும் போதாதா..?

ஒவ்வொரு காலத்திற்கும் தினுசு தினுசாய் தின்பண்டங்கள் வாரி வழங்கிய பெருமை பனை மரங்களுக்கே உண்டு. கண், மூக்கு, முகம், சட்டை என்று அப்பிக்கொண்டு உரிஞ்சிய நுங்கு, பனை ஓலையில் வாங்கிக் குடித்த தெழுகு, அப்படியே சாப்பிட்ட பனம் பழம், கரையான் புற்றுகளிலும், கல்லிடுக்குகளிலும் தேடிப் பொறுக்கி வெட்டி சாப்பிட்ட பனங்கொட்டை, நெருப்பில் சுட்டும், அடுப்பில் வெக வைத்தும் ருசித்த பனங்கிழங்கு.. தின்பண்டங்களுக்கு மட்டும் பஞ்சமே இருந்ததில்லை.
ஓடையோரம் நெல்லிமரம், மதகோரம் கொய்யா மரம், கிணற்று மேட்டு மாமரம், வயல் பொலி ஓரம் சீதாப்பழமரம், ரோட்டொரம் சப்போட்டா மரம், பக்கத்து வீட்டு கொலுமிச்சை மரம்.. பசியைத் தீர்க்க வழியா இல்லை எங்கள் கோரக்காட்டுப்புதூரில்...??!!



8 கருத்துகள்:

  1. வீட்டிலிருந்து திருட்டுத்தனமாய் எடுத்து வந்த புளியுடன், மிளகாயும், உப்பும் வைத்து அம்மிக் கல்லில் கொட்டி, ஈர்க்கு மாற்று குச்சியில் சொருகி சப்புக்கொட்டிய புளி லாலி பாப் இப்பொழுது கிடைக்கவே கிடைக்காது....

    நாக்கோடு சேர்ந்து மனதும் ஏங்குகிறது.....

    பதிலளிநீக்கு
  2. அக்கா! செமையான பதிவுக்கா!

    #ஞாபகங்கள் கிளர்ந்தெழுகின்றன!

    :-)

    பதிலளிநீக்கு
  3. //பெப்பெர்மின்ட், லாலி பாப், சவ்வு மிட்டாய், இஞ்சி மரப்பான்..///

    தேன் மிட்டாய், அடை, காரவடை, நவாப்பழம் இதெல்லாம் மிஸ்ஸிங்!!

    பதிலளிநீக்கு
  4. @வெளங்காதவன்™
    \\ அக்கா! செமையான பதிவுக்கா!
    #ஞாபகங்கள் கிளர்ந்தெழுகின்றன!
    :-)

    அப்படியா?! மிக்க நன்றி..

    பதிலளிநீக்கு
  5. @வெளங்காதவன்™
    //தேன் மிட்டாய், அடை, காரவடை, நவாப்பழம் இதெல்லாம் மிஸ்ஸிங்!!

    அட ஆமாம் ல.. எத சொல்ல, எத விட..?!

    பதிலளிநீக்கு
  6. @குமரேசன் ஆறுமுகம்
    இப்பவும் கூட ஒரு நாள் வயதை மறந்து முயன்று பாருங்களேன் அண்ணா..
    நான் அண்ணியிடம் சொல்ல மாட்டேன்.. :)

    பதிலளிநீக்கு
  7. இதை படிக்க படிக்க இன்று நாம் எத்தனை தின்பண்டங்களை தொலைத்துவிட்டோம் என்று தெரிகிறது!!!!
    நீ குறிப்பிட்டவை பாதியை தான் நான் ருசித்திருக்கிறேன்! அருமையான பதிவு தோழி அனைத்தும் அழகான நினைவூட்டல்கள்!

    பதிலளிநீக்கு