திங்கள், ஏப்ரல் 09, 2012

கோரக்காட்டுபுதூர் Professionals

பொதுவாக நகரத்தில் பணிக்குச் செல்பவர்களை மூன்று வகையாகப்பிரிக்கலாம்.

  • மடிப்பு கலையாத branded சட்டையில் அழுக்கு "டை" கட்டியிருந்தால், அது Management professional 
  • தினமும் காலையில் coolers போட்டுக்கொண்டு கடலை போட்டால், அது IT Professional 
  • பாக்கெட் இல் இரண்டு, மூன்று கலர் பேனா வைத்திருந்தால், அது Engineers .. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்..
ஆனால், எங்கள் ஊரில் ஒரே ஒரு profession தான், விவசாயம் - Agriculture - किसान. இவர்களும் அதிகாலைப் பரபரபிற்கும், வார இறுதி கொண்டாட்டத்திற்கும் பழக்கப்பட்டவர்களே. காலை 7.30 மணிக்கு தூக்குபோசில் சாப்பாடு எடுத்துக்கொண்டும், பொறி காகிதத்தில் வெற்றிலையும் பாக்கும், இப்போது புதிதாக செல்போனும் கட்டிக்கொண்டு, பள்ளி செல்லும் குழந்தையின் சலசலப்போடும், ஆரவாரத்தோடும் தொடங்கும் இவர்களது காலைப் பொழுதுகள் , தினம் தினம் தினுசு தினுசாய் வேலை பார்க்கும் சகலகலா வல்லவர்கள். களை பறித்தல் (Debugging), பாத்தி கட்டுதல் (Module development), நீர்  பாய்ச்சுதல் (Prototyping) என்று உடலுக்கும் உள்ளத்திற்கும் சவாலான வேலைகளை அசால்ட்டாக செய்வர். 



இவர்களுக்கும் dress code எல்லாம் உண்டு. வெயிலிலிருந்து தப்பிக்கவும், அரிப்புகளிளிருந்து காத்துக்கொள்ளவும், கணவருடைய / மகனுடைய / சகோதரனுடைய முழுக்கை சட்டைகள், கோட் ஆகவும், பழைய சேலையோ தாவணியோ தலைக்கவசமாகவும் மாறிவிடும். காலையில் தோராயமாக 7.15 மணிக்கு ஊர்முனை பிள்ளையார் கோவிலில் கூட்டம் கூடி, அவரவர் சகாக்களுடன் கூட்டு சேர்ந்து, எவர் காட்டிற்கு செல்லலாம் என்று முடிவெடுத்து, தீர்மானம் நிறைவேற்றப்படும். 7.45 மணியளவில் தோட்டத்திற்குள்  கால் வைப்பார். கை, அதன் போக்கில் மும்முரமாக வேலை செய்ய, மனம் வீட்டு பிரச்சனையில் லயித்திருக்க, வாய் வெற்றிலையுடன், திருமதி செல்வத்தையும், தென்றலையும் கடித்துக் குதறிக்கொண்டிருக்கும்.

10 மணிக்கு காலை உணவு! கொய்யா, மா, வாழை மரங்கள் ஆசையாய் தலை கோதி விட, பழைய சோறும், அப்பொழுது தான் மண்ணிலிருந்து  பறித்து எடுத்த வெங்காயமும், கை நிறைய அள்ளிக்  குடித்த கிணற்று  தண்ணீரும்.. அட அட அட.. This is the secret of their energy!



இந்த  1 மணி நேர இடைவெளியில், 1500 ரூபாய் கொரியன் போனில் அட்டகாசமாக பாட்டுபாடி நலம் விசாரிக்கும் கணவன்மார்கள், மிட்டாய் வாங்க  காசு கேட்க வரும் பொடிசுகள், காலேஜ் படிப்பைப்பற்றி விசாரிப்புகள், சின்ன வயதில் செய்த அட்டகாசங்கள், நன்றாக படிக்கவேண்டும், வெயிலில் வர வேண்டாம், நன்றாக சாப்பிட வேண்டும், சத்தாக சாப்பிடவேண்டும், எத்தனை அக்கறைகள், எத்தனை எத்தனை கரிசனங்கள்..சேரனும் தங்கர்பச்சானும் சேர்ந்த  படக்கலவைங்க  இது..

1 மணிக்கு தேநீர் நேரம். கிழக்கு வேலி பார்த்த தென்னை மரமோ, தண்ணீர் மதகோ இவர்களது சிம்மாசனமாய் அமைந்து விடும். எவ்ளோ மொக்கையா டீ கொண்டு போய் குடுத்தாலும், நம்மை விட்டு கொடுக்காமலேயே பேசுவாங்க பாருங்க.. இதுல தான் எங்க மக்களை அடிசுக்க ஆளே கிடையாதுங்க ... 

கண்ணு, பாப்பாத்தி, அழகு மொவர, பட்டுகுட்டி, கொங்கு பொடுசு.. இவங்கள மாதிரி வித விதமா  கொஞ்சி பேசவும் யாராளையும் முடியாது.. 



3 மணிக்கு இவங்க duty முடிஞ்சிரும். வெள்ளிக்கிழமை தான் இவங்களுக்கு salary day. எங்க ஊர் சந்தை அப்போ தான். இவங்களுக்கும் incentives எல்லாம் உண்டுங்க. அறுவடை நாள்கள்'ல நெல்லும், கடலையும் கிடைக்கும். பயிர் விதைக்கிற நாள் ஆகட்டும், அறுவடை தொடங்கற நாள் ஆகட்டும், முடியுற நாள் ஆகட்டும்  நிச்சயம் மிச்சர், போண்டா  வோட 'Tea Party' தான்.

மொத்தத்தில், எங்க ஊர் professionals இல்லேன்னா உலகமே இயங்காதுங்க. இவங்கள மாதிரி உழைப்பவர்களும்  கிடையாது, வாழ்க்கையை  அனுபவிப்பவர்களும்  கிடையாதுங்க ..



13 கருத்துகள்:

  1. இப்படி ஒரு கிராமத்தில் வாழ எனக்கு வாய்ப்பு கிடைக்க வில்லை என்ற ஏக்கம் எட்டி பார்க்கிறது என்னில்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிச்சயம் ஒரு நாள் எங்கள் உலகிற்கு உங்களை அழைத்துச் செல்கிறேன் அண்ணா..!!

      நீக்கு
  2. ///எங்க ஊர் professionals இல்லேன்னா உலகமே இயங்காதுங்க. இவங்கள மாதிரி உழைப்பவர்களும் கிடையாது, வாழ்க்கையை அனுபவிப்பவர்களும் கிடையாதுங்க ..////

    இந்த அனுபவங்கள் இப்போது வழக்கொழிந்து விட்டது என்றே கூற வேண்டும்... விவசாயக் கூலிகள் இப்போது குறைந்த வண்ணம் உள்ளனர்...
    கடந்த நிலக்கடலை அறுவடையின்போது, பிகாரிகளைக் கொண்டு வேலை வாங்கியது நினைவில் வந்து போகிறது...
    இனி வரும் காலங்களில், கூலிகளற்று இயந்திரத்தையும், ரோபோக்களையும் தேடும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பதே நிதர்சனம்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒத்துக்கொள்ள வேண்டிய கசப்பான உண்மையே..

      நீக்கு
  3. இனி வரும் காலங்களில், இளைஞர்களின் செயல்பாடுகள், விவசாயத் துறையில் எப்படி இருக்கும் என்பதைக் கணிக்க முடியவில்லை...

    எனினும், http://www.artveedu.com/2012/04/blog-post_09.html இது போன்ற செய்திகள் மனதிற்கு இதம் தருகின்றன...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாற்றங்கள் நிச்சயம் நேறும்.. எதிர்பார்ப்போம்!!

      நீக்கு
  4. ///மொத்தத்தில், எங்க ஊர் professionals இல்லேன்னா உலகமே இயங்காதுங்க. இவங்கள மாதிரி உழைப்பவர்களும் கிடையாது, வாழ்க்கையை அனுபவிப்பவர்களும் கிடையாதுங்க ..///
    அது வேணா உண்மை தான்!!!
    என்னதான் ஏசி ல உட்கார்ந்துட்டு professionals ன்னு சீன போட்டாலும் இந்த professionals இருந்தா தான் சாப்பாடு!!!

    அருமையான வரிகள்!!!

    பதிலளிநீக்கு
  5. ///மொத்தத்தில், எங்க ஊர் professionals இல்லேன்னா உலகமே இயங்காதுங்க. இவங்கள மாதிரி உழைப்பவர்களும் கிடையாது, வாழ்க்கையை அனுபவிப்பவர்களும் கிடையாதுங்க ..
    ///

    அது வேணா உண்மை தான்!!!
    என்னதான் ஏசி ல உட்கார்ந்துட்டு professionals ன்னு சீன போட்டாலும் இந்த professionals இருந்தா தான் சாப்பாடு!!!
    அருமையான வரிகள்!

    பதிலளிநீக்கு
  6. copyright பிரச்சனை இல்லை எனில் “அழகு மொவர”..இந்த வார்த்தையை நான் என் பேச்சுவழக்கிலும் எழுத்திலும் பயன்படுத்திகொள்ளலாமா?

    கிராமத்தானை பிறக்கவில்லையே என்று மனம் நோகிறேன்.. சீன் போடாத ஒரு Scenery வாழ்க்கை வாழ்ந்திடலாம் அங்கே..!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிச்சயமாக copyright எல்லாம் கிடையாதுங்க :)
      சொர்கமே என்றாலும் எங்கள் ஊரு போலாகுமா?!

      நீக்கு