வியாழன், டிசம்பர் 08, 2011

உணர்வுகளும் விலைபோகிறதா??

நம் மனித பூவுடல் இரத்தம், சதை மட்டும் அல்லாது உணர்வுகளாலும் நிறைந்தது. ரத்தத்திற்கும் உணர்வுக்கும் நெருங்கிய சொந்தமுண்டு. மொத்த மகிழ்ச்சியில் உடல் முழுதும் சீறிப் பாய்ந்து கொண்டாடுவதாகட்டும், கவலைகளிலும் கோபத்திலும் தன ஆக்ரோஷத்தை வெளிப்படுத்துவதாகட்டும், அதன் ஒவ்வொரு செயல்பாடுகளும் உணர்வுகளோடு ஒன்றியே அமையும்.  

உணர்வுகள் பன்முகம் கொண்டது. ஆர்ப்பரிக்கும் மகிழ்ச்சி, நெஞ்சைப் பிழியும் சோகம், வலி, ஆக்ரோஷம், விரக்தி, ஆதங்கம், பயம், இழப்பு.. இப்படி எண்ணற்றவை.சில உணர்வுகள் பகிரக்கூடியவை. சில பகிரக்கூடாதவை. நம் பகிரும் உணர்வுகள் பலரிடம் நிச்சயம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். உதாரணமாக, மகிழ்ச்சியான உணர்வுகள் மகிழ்ச்சியைப் பரப்பும், சோகம்  மட் றவரை ஆட்கொண்டு விடும், இழப்பு வெறுமையை விதைத்து விடும். சில உணர்வுகள் பகிரக்கூடாதவை. உதாரணம், விரக்தி - அளவுகடந்த விரக்தி தீய எண்ணங்களை மேலெலும்பச்செய்யும், ஆக்ரோஷம் - நல்ல உறவுகளை, ஏன், உயிரைக்கூட கொன்றுவிடும்.

எல்லாம் பணிமயமான இந்த உலகத்தில் உணர்வுகளும் விலை போகின்றன, ஊடகங்களின் வடிவில். மகிழ்ச்சியை கொண்டாடும் ஊடகங்கள் வெகு சிலதே. 

இழப்பின் வலி, வாழ்வின் விரக்தி, அதில் தடுமாறும் நாயகனின் ஆக்ரோஷம், தேவையே இல்லாமல் வரும் நாயகியுடனான காட்சிகள், தன் தீவிரவாதத்தை சரி என்று நிரூபிப்பதில் போய்க்கொண்டிருக்கிறது, இன்றைய சினிமாக்கள்.

தந்தை-மகள், தாய்-மகன் பாசங்களை வியாபாரத்தனமாக எண்ணவில்லை நாங்கள். கவிதைகளாய் விவரித்த ஒரு தாய்க்கும்-கருவுக்கும் இடையே யான உணர்வுகளை கூட ரசித்தோம்.அனால், சிசுவை இழந்த தாயின் வலியை, அந்த உச்ச கட்ட கொதிநிலையை, எதற்காக காட்ட வேண்டும்??

தோல்வியை ஏற்கத்துணிவில்லாத நாயகன் போதையை நாடி செல்லத்தான் வேண்டுமா?

நாயகிகள் தங்கள் சுய மரியாதைகளை விடு விலகித்தான் நாயகர்களை கவர வேண்டுமா?

நகைச்சுவைக்கலைஞர்கள், தங்களையும் இழிவு படுத்தி, தங்கள் குடும்பத்தையும் இழிவுபடுத்தி த்தான் சிரிப்பு மூட்ட முடியுமா?

10 வருடம் முன்பான 'U' தணிக்கை சான்றிதழ் படங்களையும், தற்போதைய 'U' படங்களையும் ஒப்பிட்டுப்பார்த்தால், உணர்வுகள் எப்படி வியாபாரமாக்கப்பட்டது  என்பது புரியும்.

திரைப்படங்கள் காற்று அடிக்கும் குழாய் போல, ஏற்கனவே பல உணர்வுகளை வெளியிட முடியாமல் திணறும் நம் மனதில், இன்னும் அழுத்தம் சேர்ந்தால், ஒரு நாள் வெடித்தே விடும். ஒவ்வொரு திரைப்படம் பார்க்கும் போதும் நம் மனதில் நாம் அறியாமல் பூஞ்சைகள் படர்ந்துவிடும். அது நாளடைவில் விஷக்காலான்களாய் மாறுவதற்குள், ஜாக்கிரதை!!7 கருத்துகள்:

 1. திரைப்படங்களும்,டீ.வீ நாடகங்களும் வர வர மோசாமாதாம்ப்பா போகுது.சொன்னால் சொல்றவங்களதான் பைத்தியம்,காலத்திற்கேற்ப மாறத்தெரியாதங்கனு சொல்லுவாங்க.

  பதிலளிநீக்கு
 2. இதுவும் கூட நாகரிக மோகத்தில் மற்றொரு வடிவமே.. நாம் நம்மை சுற்றி இருப்பவர்களால் தான் இதை ஏற்றுக்கொள்கிறோமே தவிர, நம் மனதிற்கு பிடித்திருக்கிறதா என்பது கேள்விக்குறியே..!!

  பதிலளிநீக்கு
 3. வலிகள் உள்ளவனுக்கு வடிகால்களாய் நண்பர்கள் இருப்பார்கள், உறவுகள் இருப்பார்கள்.. இவை இரண்டும் இல்லாதவன் கலையை கையில் எடுப்பான்.. காதல் தோல்வி அடைந்தவன் கவிதை எழுதுவது இந்த ரகம் தான்.. அவன் ஊடகத்தில் சேரும் பொழுது மொத்தமும் வலிகளாகவே இருக்கும்... ஆங்கில எழுத்தாளர் தாமஸ் ஹார்டியின் படைப்புகள் முழுவதும் சோகத்தில் தான் முடியும்... இது ஒரு வகை...

  இன்னொரு வகை சார்லி சாப்ளின், தன சொந்த வாழ்க்கையில் இருந்த சோகம் கூட தன உடன் இருப்பவர்களிடம் பாதிக்க கூடாது என்று பிறரை சிரிக்க வைத்து மகிழ்ந்தான் அவன்... சிரிக்க வைப்பது மட்டுமல்லாமல் சிந்திக்கவும் வைத்தான்...

  முதல் ரகத்தில் இருந்து பாடம் கற்றுக் கொள்ளலாம்..
  இரண்டாம் ரகம் தலைவனாகலாம்...

  பதிலளிநீக்கு
 4. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 5. மனித உணர்வுகள் மீளமுடியாமல்

  எதார்த்தம் என்னும் பெயரில்

  சிக்கித் தவிக்கிறது.  ஏன் இன்றய 'U' தணிக்கை சான்றிதழ் படங்களை கூட

  குடும்பத்தோடு பார்க்க முடிவதில்லை.

  சில படங்களை "குடும்பத்தோடு பார்க்க வேண்டிய படம்"

  என்று குறிப்பிட்டு சொல்லவேண்டிய நிலை

  பதிலளிநீக்கு
 6. @Surya Jeeva இன்றைய கலைஞர் களின் நோக்கம் எது என்பது அவர்களுக்காவது புலப்படுகிறதா என்பதே ஒரு முக்கிய வாதம், மொத்தத்தில் அவர்களின் கோபங்களையும் , விரக்திகளையும் நம் மேல் திணிக்கிறார்கள் என்றே எண்ணத்தோன்றுகிறது

  பதிலளிநீக்கு