வெள்ளி, ஏப்ரல் 27, 2012

Google-ஓ-Google

வாழ்க்கையின் சுவாரஸ்யமே விடை தெரியாத கேள்விகளிலும், புரிந்து கொள்ள முடியாத விசித்திரங்களிலும், விவரிக்கமுடியாத அதிசயங்களிலும் தான் புதைந்து கிடக்கின்றன. ஆனால், இன்றைக்கு விடைதெரியாத கேள்விகள் என்று எதையும் சொல்வதற்கில்லை (தேர்வுகளை விடுத்து :) ) 'கூகிள் இருக்க பயமேன்?'
உண்மையில் Linkedln profile கள் சிம் கார்டுகள் வாங்கவும், Facebook profile கள் திருமணப்பொருத்தம் பார்க்கவும் பயன்படுத்தப்படும் நாட்களுக்கு மிக அருகில் வந்துவிட்டோம் நாம். சின்ன சின்ன விசயங்களுக்கு கூட கூகிள்'ஐ நாட ஆரம்பித்து விட்டோம். ஒரு பத்து வருடங்களுக்கு முன்னால் நம் தேடல்களே வேறு. 

பாட்டியின் கை வண்ணத்தில் நா ஊரும் பதார்த்தங்கள், தாத்தா வின் சில்லறைகள், புத்தகங்கள், அம்மா பார்த்து பார்த்து எடுத்த புதுத்துணிகள், அப்பாவின் முரட்டுக் கைகடிகாரம், அவரது சட்டைப் பக்கெட்டுகள்.. இப்படி சொல்லி சொல்லி அனுபவிக்க ஆயிரம் விஷயங்கள் உள்ளன.

இன்றுவரை அதே தேடல்கள் தான், ருசி ருசியான உணவு வகைகள், பேஷன் ஐ பறை சாற்றும் உடைகள், கடிகாரங்கள், வீடியோக்கள், முகம் தெரியாதவர்களிடம் பெறும் அறிவுரைகள், ஆலோசனைகள், பாராட்டுக்கள்... வாழ்க்கையின் சுவாரஸ்யங்கள் எங்கே போய் விட்டன?!

இணையம் உங்களுக்கு சுவாரஸ்யமாகவே தோணலாம். கலர் கலராய் படங்களும், பாப்-அப் விளம்பரங்களும், யாரோ அந்நிய மனிதனின் பீட்டர்-ம் சுவாரஸ்யம் கிடையாது.
நிஜமான சுவாரஸ்யம் எங்கு இருக்கிறது?

நம் பாட்டிகளிடம் கேட்டுப்பாருங்கள், அவர் சொல்லுவார் நூறு ரெசிபிகள். அவை ஒவ்வொன்றும் நம் தாத்தாவுடைய/அப்பாவுடைய/அத்தையுடைய விருப்பமாதாகவே இருக்கும். ஒவ்வொன்றும் ஒவ்வொரு கதை சொல்லுமே. அவருடைய சுருக்குப்பையிலிருந்து வரும் கதைகள் யாவும் தாத்தாவின் கம்பீரத்தையும், அப்பாவின் கெட்டிக்காரத்தையும், அத்தையின் விட்டுக்கொடுத்தலையும் கொஞ்சம் மிகையாகவும், மிஞ்சும் சுவையோடும், பீட்டர் விடுவார் பாருங்கள்.. Facebook எல்லாம் தோற்றுப்போய்விடும். 

நம் தாத்தாவிடம் கேட்டுபாருங்கள், அவரது துருப்பிடித்த அரையணா கூட பசுமையான நினைவுகளை விடாமல் பற்றியிருக்கும். அது அவரது முதல் சம்பாத்யமாகக்கூட இருக்கலாம். அவரது முழு உழைப்பிலும், வியர்வையிலும் வெட்டிய கிணறு, ஊற்றுத் தண்ணீ ரை முதல்  முதலில் அள்ளிக்குடித்த பரவசம், ஒரு குழந்தையின் குதூகலத்துடன் விவரிக்கும் அவர் வீடு கட்டிய அனுபவம், பெண்ணிற்கு திருமணம் செய்து வைத்த கர்வம், பாம்புகளையும் தேள்களையும் கையில் எடுத்து விளையாடிய வீரம், தென்னை மரமும், பனை மரமும் ஏறத்தூண்டிய இளமை, தூக்கு போசியுடன் அவர் பள்ளி சென்ற பருவம், கட்டை வண்டி கட்டிக்கொண்டு சந்தைக்கு ஷாப்பிங் போனது, தேர் கடைகளில் விண்டோ ஷாப்பிங் செய்தது.. கால இயந்திரத்தில் பயணம் செய்த உணர்வைத்தரும். 'Hall of fames' இல் ஏற்றப்படாத சாதனை மனிதர்கள் இவர்கள்.

நம் அம்மாக்களை கேட்டுப்பாருங்கள், நமக்கு எந்த உடை பொருந்தும் என்று அவரை விட வேறு யாருக்கும் ரசித்து சொல்லத்தெரியாது. அவரது தேர்வுகள் 'Out-of-fashion' ஆகா இருக்கலாம். ஆனாலும் அன்பு, பாசம், பரிவு, கம்பீரம் கலந்த கலவையாக நிச்சயம் இருக்கும். இன்றுவரை என் உடைத்தேர்வுகள் எல்லாம் என் அம்மாவினுடையதே. சிவகிரி வாணி கட் பீஸிலிருந்து ஈரோடு கடை வீதி சுமங்கலி சில்க்ஸ் இல் ஆரம்பித்து சென்னை சில்க்ஸ் வரை கூட தேடல் முடியாது. அதுவும் என் ஒவ்வொரு உடைகளும் பின்னணியிலும் சின்ன சின்ன கோபங்கள், நிறைய சந்தோஷங்கள், அர்த்தமற்ற சண்டைகள், சம்பந்தமே இல்லாத வீரப்புகள் என்று பல சுவாரஸ்யங்கள் புதைந்து கிடக்கும். ஆன்லைன் இல் யாரோ கலர் கலராய் மாடல் களின் பரிந்துரைகளும் ஹிட் லிஸ்ட் உம் அவ்வளவு சுவாரஸ்யமானதா என்ன..?


நம் அப்பாவிடம் கேட்டுப்பாருங்கள் placement  இல் ஆரம்பித்து, வாழ்க்கை வரை. ஏனெனில், அவர் கற்ற பாடங்களும், பெற்ற அனுபவங்களும் ஏராளம். நம்மைப்பற்றி அறியாதவர்கள் கொடுக்கும் ஆலோசனைகளை விட, நம் தந்தையிடமிருந்து  பெற்றவைகள், ஒரு வினையூக்கி போல, நம்முள் வெற்றி விதையை விதைத்து விட்டுப்போகும்.

இந்த சுவாரஸ்யங்கள் Page ranking algorithm மூலமாகவோ, hit list மூலமாகவோ கிடைக்காது. கொஞ்சம் கூகிள்-ஐ விட்டு வெளியே வந்து பாருங்கள், வாழ்க்கை எவ்வளவு சுவாரஸ்யமானது என்று புரியும்.
சுவாரஸ்யமான வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள்!!

குறிப்பு: படங்கள் - கூகிள்-கு நன்றி :)

7 கருத்துகள்:

  1. நல்லவேளை நான் இன்னும் சுவாரஸ்யங்களை இழக்கவில்லை....
    #அக்கா மேடம், தொடரட்டும் தங்கள் பொன்னான பணி.....

    :-)

    பதிலளிநீக்கு
  2. கூகிள் மட்டுமில்லங்க..இன்னும் ஏகப்பட்ட ஸோசியஸ் நெட்வர்க்கிங் சைட்களில் சிக்கிகொண்டுவிட்டனர் நமது சகோதர/சகோதரிகள்..காலை விடிந்தாலே முதல் எண்ணம் அவர்களுக்கு அதைப்பற்றிதான் இருக்கிறது..

    இது எனக்கு தவறாக படவில்லை. புதிதாய் ஒரு ஃபோன் வாங்கினால் ஒரு பத்து நாளைக்கு அதை பார்த்து ரசித்துகொண்டுதானே இருப்போம்..பிறகு அதன் நிறைகளுக்கு சமமாய் குறைகளும் தெரிந்தபின், அதை கொஞ்சுவதை விட்டுவிட்டு பயன்படுத்தமட்டுமே செய்வோம்..

    இதுவேதான் இங்கும் நிகழ்கிறது, புதியவர்களுக்கு தான் கூகுள் ஒரு முக்கியமான தளமே தவிர, இணையத்தை பல வருடங்களாக பயன்படுத்துவோர் அதை அவசரத்தேவைக்கு அணுகுவதோடு சரி..

    வாழ்வின் ரசனைகள், அதன் நிறங்களை நாம் இணையத்தில் இன்னும் ஒரேடியாக தொலைத்துவிடவில்லை.. எங்கோ இதயத்தின் மூலையில் மனம் மனிதர்களை தேடிகொண்டே தான் இருக்கிறது..

    சொல்லப்போனால், அந்த தேடல் தான் நம்மை இணையத்திலும் கட்டிவைக்கிறதோ என்னவோ? அந்த நண்பன்/அந்த தோழி இதோ இங்கே கிடைத்துவிட மாட்டாரா என்றே தேடுகிறோமோ என்னவோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. :)
      இந்த கண்ணோட்டம் நன்றாக இருக்கிறதே..
      தங்கள் கருத்துக்கு நன்றி..

      நீக்கு
  3. ////இந்த சுவாரஸ்யங்கள் Page ranking algorithm மூலமாகவோ, hit list மூலமாகவோ கிடைக்காது. கொஞ்சம் கூகிள்-ஐ விட்டு வெளியே வந்து பாருங்கள், வாழ்க்கை எவ்வளவு சுவாரஸ்யமானது என்று புரியும்!////
    கண்டிப்பா!!!!!!

    அருமையான பதிவு!

    பதிலளிநீக்கு