வியாழன், ஆகஸ்ட் 04, 2011

கல்வி - இப்படியும் இருக்கலாமே...

இந்த தலைப்பை பார்த்ததும் தெரிஞ்சிருக்கும், அங்க தொட்டு இங்க தொட்டு கடைசியா சமச்சீர் கல்விக்கு வருவாங்கன்னு. சமச்சீர் கல்வியை விமர்சிக்கின்ற அளவிற்கு நான் பெரிய ஆள் கிடையாது, 

ஒரு மாணவர் என்கின்ற முறையில் என் எண்ணங்களை பகிர்ந்து கொள்கிறேன். அதற்காக, இப்பொதுள்ள கல்வி முறையை நான் குறை கூற வில்லை. வெண் பொங்கலில் உள்ளது போல அங்கங்கே கொஞ்சம் (அதிகமான) மிளகுகள்! அதை விரும்பி உண்பவர்கள் வெகு சிலரே!! மிளகுகளை கலைத்து, இன்னும் கொஞ்சம் முந்திரி சேர்த்து, நெய் விட்டு, திருப்தியாக சுவையாக அளிக்கலாமே??!!


ஐந்தறிவு மிருகங்கள் கூட தன குட்டி களுக்குத் தேவையான வற்றையே முழுமையாக கற்றுக்கொடுக்கின்றன. காக்கை, குருவி கள், பறக்கவும், இரை தேடவும் மட்டுமே கற்றுக்கொடுக்கின்றன. நீந்துவதற்கோ, ஓடுவதற்கோ கற்றுக்கொடுப்பதில்லை. ஆயினும், அவர்கள் உலகம் அவ்வளவு போட்டி நிறைந்ததல்ல. நம் உலகை சமாளிக்க அனைத்து த்துறையிலும் திறன் அவசியமே. அத்திறன் அரைகுறையாய் புகுத்தபடுகிறது என்பதே எனது வாதம். புகுத்தபடுகிறது என்பதை விட வலுக்கட்டயமாக திணிக்கபடுகிறது என்பதே சாலப் பொருந்தும். இப்போதெல்லாம், கல்லூரி ப்படிப்பு கூட, விருப்பதிற்கேற்ப  இருக்கிறது என்று எண்ணிகொள்ளலாம்.. (எண்ணம் மட்டும் தான்!! அவரவர் கஷ்டம் அவரவருக்கு :) ). ஆனால், பள்ளிபடிப்பு??

ஆக, எப்படி த்தான் இருக்க  வேண்டும் கல்வி?? அப்படி கேளுங்க.. எத்தனை குழு?? துணை வேந்தர், விரிவுரையாளர், தலைமை ஆசிரியர், ஆசிரியர் என் ஆய்வாளர்கள்.. இவர்களை  எல்லாம் கேட்கின்றீர்களே.. எதாவது மாணவர்களை கேட்கலாம் அல்லவா??


இயற்பியலில், பிரஷர் குக்கரில் ஆரம்பித்து, டிவி வரை எப்படி இயங்குகிறது என்று கற்றுக்கொள்கிறோம். 50,000 ரூபாய் சம்பளம் வாங்கும் ஒருவரிடம், டிவி எப்படி இயங்குகிறது என்று கேட்டால் விழிப்பார். ஆனால், அவருக்கு சந்தையில் இருக்கும் LCD, LED முதல் புதிய வரவு ஜப்பான் டிவி கள் வரை அத்துபடி. நான் ஒவ்வொரு விஷயத்தையும் அலசி ஆராய வேண்டும் என கூறவில்லை, நான் படித்த அடிப்படை விஷயத்தை நினைவில் கொள்ள வேண்டும் என்றே கூறுகிறேன். 

வேதியிலில், Acid, Base என்று 2 தடிமனான புத்தகங்கள், பற்றாக்குறைக்கு குறிப்பு புத்தகங்கள் எல்லாம் ஏறத்தாழ 2.5 ஆண்டுகள் படித்து, தேர்வெழுதி, 6 மாதம் கழித்து, ஏதேனும் மருத்துவக்குறிப்பில் இந்த வார்த்தைகளை காண நேரிட்டால், புத்தகத்தின் அட்டையும், தடிமனும் மட்டுமே நினைவில் நிற்கும். அதன் பொருட்டா கற்கிறோம்?? 

எவ்வித கணக்கையும் கால்குலேட்டரிலும், கணினியிலும் ஏன் அபாக்கசிலுமே போடத்தெரிந்த நமக்கு மனக்கணக்குகளை ஏன் போடத்தயங்குகிறோம்?? ஏன் தடுமாறுகிறோம்??? ஏன் கால்குலேட்டரையே நாடுகிறோம்???

இந்த தடுமாற்றத்தை CBSE ஒ  Matric ஒ ஏன் சமசீர் கல்வியோ தர முடியாது. ஒரு மாணவன் ஆங்கிலத்தில் சரளமாக பேசுகிறானெனில், அவன் CBSE யிலும், தடுமாறி       
உரையாடு கிறான் என்றால் Matric பள்ளியிலும், ஆங்கிலத்தை லட்சியம் செய்யாமல் , தமிழில் உரையாடு கிறான் என்றால் அரசு பள்ளியிலும் பயின்றவனாக இருக்க வேண்டும். முதற்கட்ட இடைவெளி இங்கு தான் தொடங்கு கிறது. 

ஏறத்தாழ, Matric மற்றும் அரசு பள்ளி படங்கள் ஒன்றுதான் எனினும், பாடத்தின் தரம் மற்றும் ஆழம் வேறுபாடும். CBSE ஐ பொறுத்த மட்டில், அது விரிவு படுத்தப்பட்ட, அதிக செய்முறை விளக்கத்துடன் கூடிய, பளுச்சுமையுடன் கூடியது எனலாம். பாடத்துடன் பிற ஆர்வங்களையும் வளர்த்து விடுவது (கவனிக்க!! வளர்ப்பது வேறு, வளர்த்து விடுவது வேறு) இதன் பலம்.



அதற்காக, '3 இடியட்ஸ்' படத்தில் வருவது போல வேண்டும் என்பதல்ல இதன் முடிவுரை. எந்த வகை கல்வியானாலும் ஈடுபாட்டோடு, நாட்டத்தோடு , சுற்று புறத்தோடு ஒன்றி கற்க வைத்து, இடமறிந்து துணிவுடன் செயல்பட வைத்தலையே எங்கள் இளையதலைமுறைக்கு போதிப்பதை விரும்புகிறோம்.

2 கருத்துகள்:

  1. //எந்த வகை கல்வியானாலும் ஈடுபாட்டோடு, நாட்டத்தோடு , சுற்று புறத்தோடு ஒன்றி கற்க வைத்து, இடமறிந்து துணிவுடன் செயல்பட வைத்தலையே எங்கள் இளையதலைமுறைக்கு போதிப்பதை விரும்புகிறோம்.//

    இன்று டிகிரி முடித்தவரையே அவர் படித்த பாடங்களிலிருந்து எத்தனை கேள்வி வேண்டுமானாலும் கேட்டுப்பாருங்கள்.. ஒன்று தெரியாது என சொல்வார்...அல்லது சமாளிப்பார்.. ஏட்டுசொறக்கா கறிக்கு உதவாது... போதிக்கும் முறையை சீர் படுத்த வேண்டும் நன்றி

    பதிலளிநீக்கு
  2. Good.. everyone got views about education.... esp the Samacher Kalvi.. keep writing..

    பதிலளிநீக்கு