புதன், செப்டம்பர் 25, 2019

சென்னை - ஊரல்ல; என் உற்சாகம், என் கொண்டாட்டம்!

சென்னை-லையா இருக்கீங்க

'யப்பா, எப்படித் தான் இருக்கீங்களோ, அடிச்சா  வெயிலு, இல்லைனா மழை!'

'
வீட்டுக்குள்ளயே அடைஞ்சு கிடைக்கணும், எங்க பாத்தாலும் டிராஃபிக்'

'
உங்களுக்கும் வேற வழி இல்லை, அப்படித்தானா?'

இப்படி சொல்றவங்களுக்கு கத்தி சொல்லணும் னு ஆசை, "சென்னை எனக்கு பிடிச்சிருக்கு, நான் இங்க சந்தோஷமா இருக்கேன்'னு!!!"  Yes! I love Chennai.

தற்காலிகமா சொந்த ஊர்ல இருக்கேன் இப்போ. இந்த வாழ்க்கை-யை ஆசை தீர அனுபவிச்சுட்டு இருக்கேன், அதுக்காக சென்னை எனக்கு பிடிக்கல  னு இல்லை, சொல்லப்போனா மாதங்களை எண்ணிக்கொண்டிருக்கிறேன், எப்படா சென்னை போவோம் னு. அந்த பீனிக்ஸ் ஷாப்பிங், கிராண்ட் மால்-  படம், ஜூனியர் குப்பண்ணா- பிரியாணி, வீட்டு முக்குல இருக்குற பானி பூரி-னு நெறய மிஸ் பண்றேன் !

2014,
ஆகஸ்ட் 26-ம் தேதி, காலைல ஒரு 5 மணி இருக்கும், சென்ட்ரல்-ல வந்து இறங்கினப்ப ஒரு பயம், ஒரு உற்சாகம், அவ்ளோ சந்தோசம். எத்தனை படத்துல பாத்திருப்போம்? சென்ட்ரல்- இருந்து போற வழில இருக்கிற எல்லா பெயர்பலகைகளையும் படிச்சுட்டே வந்தேன். சென்னைல அந்த அதிகாலைலயும் என்ன கவர்ந்தது, பரபரப்பாக பேப்பர் அடுக்கி வச்சுட்டு  இருந்த பசங்களும், சுறுசுறுப்பா பூ கட்டிட்டு இருந்த அக்கா பாட்டிங்களும் தான்என்னோட எனர்ஜி  எக்ஸ்ட்ரா-வா டாப்-அப்  ஆனதும் அப்ப  தான்!

முதல் நாள் வேலைக்கு போனது, அங்க போய் லிப்ட் ஆபரேட் பண்ண தெரியாம திணறினப்ப முதன்முதலா சரிஞ்ச என்னோட தன்னம்பிக்கை-யை மேலும் சரியாய் விடாம, சொல்லப்போனா இன்னும் அதிக தைரியம் கொடுத்தது, இந்த ஊரும் இந்த மக்களும் தான்.

சென்னை வந்த புதுசுல, ஆபீஸ்- இருந்து தனியா நடந்து வரும் போதெல்லாம், அம்மா கிட்ட போன் பேசிட்டே வருவேன். போன் பேசிட்டு வந்தா திருடங்க அட்டாக் பண்ண மாட்டாங்கன்னு அப்ப யாரோ சொல்லிக்குடுத்தாங்க ☺, பல நேரங்கள்ல வராத போன் கால் பேசிட்டு இருப்பேன்.

சென்னை மேல எவ்ளோ பாசம் இருந்துச்சோகொஞ்சம் பயமும் இருந்துச்சு. கஷ்டப்பட்டு வாங்கின முதல் ஸ்மார்ட் போன்-அ MTC பஸ்- தொலைச்சுருக்கேன், சிட்டி சென்டர்- இருந்து  லைட் ஹவுஸ்  வரை போக (1 கி.மீ ) கு ஆட்டோ-க்கு 350 குடுத்திருக்கேன், ஒரு நியூ இயர்-க்கு நண்பர்களோட பெசன்ட் நகர் பீச் போனப்ப, 4, 5 திருநங்கைகள் வந்து ஒரு மாதிரி அசிங்கமா நடந்துகிட்டு 1000 ரூபாய்  பணம் வாங்கிட்டு போய்ட்டாங்க, சௌகார்பேட்டை -கு ஷாப்பிங் போனப்ப 650 ரூபாய் சுடிதாரை 1000 ரூபாய்-க்கு வாங்கியிருக்கேன், பக்கத்துக்கு கடைல அத 600 ரூபாய்க்கு தரேன்னு சொன்னப்ப ஒரு வாரம் சோறே எறங்கல!, மேட்டுக்குப்பம் ஏறி PTC- இறங்க பஸ் டிக்கெட் 30 ரூபாய் னு சொன்னப்ப, போக ஒரு மணி நேரம் ஆகும் போல-ன்னு நெனச்சேன். அடுத்த ஸ்டாப் லேயே இறக்கி விட்டப்ப தான் தெரிஞ்சுது, அது AC பஸ்-னும், மினிமம் டிக்கெட் 30 ரூபாய்னும். இப்படி சென்னை எனக்கு பல வித்யாசமான அனுபவங்களை குடுத்திருக்கு! Nostalgic memories you know!

சென்னை வந்த புதுசுல ஷாப்பிங் மால் போன என்ன பண்றதுனே தெரியாது. சும்மா ஒக்காந்து வேடிக்கை பாப்போம். சில மணி  நேரத்துல, நம்ம டிரஸ், சப்பல், ஹேர் ஸ்டைல், ஏன் பேசுறது, சாப்பிடற ஸ்டைல் கூட இந்த ஊரோட ஒத்து போகலேயே னு நெறய நாள் பீல் பண்ணிருக்கேன். பிக் பஜார் பில்லிங் கவுண்ட்டர பாத்து அப்படி என்ன தான் வாங்குவாங்க, வண்டி வண்டியா பில் போடறாங்களே னு யோசிச்சுருக்கேன், கல்யாணத்துக்கு அப்பறம் நானும் அவ்ளோ பொருளோடு க்யூ- நின்னது தனிக்கதை!

ஆரம்பத்துல, சென்னை- எங்க வெளிய போனாலும், ஒரு தயக்கம், ஒரு மிரட்சி இருக்கும், இப்ப அதெல்லாம் சுத்தமா மறைஞ்சு, 'ஹேய், இது நம்ம ஊருப்பா' அப்படிங்கிற சந்தோஷத்தையும் உரிமையையும் தைரியத்தையும் கொடுத்தது இந்த சிங்காரச்சென்னை தான்.
இதையெல்லாம் தாண்டி, சனிக்கிழமைகள்-, 'வணக்கம் சென்னை'-னு மொத்த சென்னை சிட்டி-கே கேக்கற மாதிரி எப்.எம் பேசுற வாய்ப்பை கொடுத்ததும், இந்த சென்னை தான்! கிட்டத்தட்ட 1000 பேர் கலந்துக்கிட்ட ஒரு நேர்முகத்தேர்வுல தேர்வான 30 பேர்ல நானும் ஒருத்தி. அதுவும் சென்னை-கு வந்த 5-வது மாதத்துல சென்னை-க்கு ரொம்ப பரிச்சியமானவங்க கூட போட்டியிட்டு தேர்வானதுனால அளவில்லாத சந்தோசம். IT- வேலை கிடைச்சாச்சு, இனி மீடியா கனவெல்லாம் அவ்ளோ தான்னு நெனச்சப்ப, என் கை -  மௌஸையும் குடுத்து மைக்கையும் குடுத்து சந்தோஷத்துல திக்குமுக்காட வச்சது இந்த ஊர்!

ஷேர் ஆட்டோ  பயணங்கள், வெளி மாநில அறைத்தோழிகளை, அழகான நினைவுகள், வீட்டு சாப்பாட்டை குறை சொல்லாம சாப்பிட சொல்லி குடுத்த விடுதிகள், என்னோட அதிகாலை பயணங்களில் பங்கெடுத்த MTC, பத்திரமா ஊருக்கு அனுப்பி வச்ச கோயம்பேடு பேருந்து நிலையம், சென்ட்ரல்/தாம்பரம் ரயில் நிலையம், திநகர் தெருவோரக்கடைகள், ஆரம்பத்துல பாத்து பிரமிச்ச சரவணா ஸ்டோர்ஸ், அழகான வார இறுதி நாட்களை குடுத்த ECR/திருவான்மியூர் பீச், அதிகாலையில் பீச் ல கொண்டாடின பிறந்தநாள், அவ்வ்வ்வ்வ்வ்ளோ சாப்பிடணும் னு பிளான் பண்ணி, கொஞ்சூண்டு சாப்பிட்டு வந்த buffetகள் (BBQ  nation, AB 's ), பிடிச்ச பாட்ட பாடிட்டே லாங் டிரைவ் போற ECR, கழுத்தளவு தண்ணியில் ஊருக்கு போன பரபரப்பான அனுபவத்தை குடுத்த 2015 மழை, வீட்டுக்குள்ளயே சோறு தண்ணி கரண்ட் இல்லாம இருக்க வச்ச வித்யாசமான அனுபவத்தைக் குடுத்த 2016 வர்தா புயல்... இப்படி சொல்லிட்டே போகலாம்! Feel good memories-னு சொல்லுவாங்கள்-, அது மாதிரி சென்னை ஒரு Feel good city! லவ் யூ சென்னை, சீக்கிரமா வந்துருவேன்!!!!!