சனி, பிப்ரவரி 18, 2012

பந்தயக்குதிரைகள் நாங்கள்..!!


"Life is a race.. run, run , run.." என்று எல்லோரும் நண்பன் பாணியில் சொல்வது வா(வே)டிக்கையாகிப் பொய் விட்டது. உண்மையில் பந்தயக்குதிரைகள் தான் நாங்கள்.

நாங்கள்? சொகுசான வேலைகளை விடுத்து பகட்டான வேலைக்கு ஏங்கும்/அலையும்/திரியும்  முதுகலைப்பட்டதாரிகள். எங்களுடைய இலக்கெல்லாம் ஒன்றே. வருகின்ற நேர்முகத்தேர்வுகளில் கையில் ஒரு (ஒரே ஒரு) வேலை.

"என் பொண்ணு சம்பாதிக்க ஆரம்பித்து விட்டாள்" என்ற பெருமையை என் அப்பா விற்கும், "என் பொண்ணு சாதித்து விட்டாள்" என்ற பூரிப்பை என் அம்மாவிற்கும், "இனி ஆசைபட்டவற்றை எல்லாம் அக்கா விடம் கேட்கலாம்" என்ற உரிமையை தம்பிக்கும் தர நிச்சயம் ஒரு வேலை வேண்டும்.

"பேத்தி என்ன வேலை செய்கிறாள்?" என்ற கேள்வியின் பதிலுக்காகவே, கோரக்காட்டுப்புதூரில் வசிக்கும் என் அய்யா வும், ஆத்தாவும், பருத்திக்கொட்டம் பாளையத்தில் வசிக்கும் என் அப்பச்சியும் அம்மாயும் ஆங்கிலத்தில் பேச வேண்டும், "கம்ப்யூட்டர் கம்பெனி",  என்று.விடுதிக்குக்ளேயே வெட்டிக்கதை பேசியபடி போகும் காலை நடை பயிற்சியிலிருந்து, காலையில் நடை போகும் பொது வாகனங்கள், நெரிசல் இல்லாத சாலை அடுத்த இரண்டு மணி நேரத்தில் பரபரப்பாக சுழலும் விந்தையை இரசிக்க வேண்டும்.

பன்னாட்டு நிறுவனங்களின் பணிகளில் ஓரளவேனும் என் அம்மாவிற்கு தெளிவு படுத்த வேண்டும்.

Income tax, Recession, Inflation என்று நானும் கொஞ்சம் உலக பொருளாதாரத்தை அலச வேண்டும்.

கல்விக்கடனை விரைவில் கட்ட வேண்டும். அப்புறம், வருமான வரி கட்ட வேண்டும். வரிக்கழிவுகளைப் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும்.


பண்டிகைக்கால விடுமுறைக்கு ஊர் திரும்ப இரயிலிலும், K.P.N Travels சிலும் டிக்கெட் முன்பதிவிற்கு அலைய வேண்டும். இன்னும் எக்கச்சக்கமாய் ஆசைகள், கனவுகள், (வெட்டிக்) கற்பனைகள்.

மேற்கண்டவைகளில் ஒன்றிரண்டாவது நிறைவேற கடுமையாக உழைக்க வேண்டும்.. உழைக்கிறோம??

நாளை துறைத்தலைவரிடம் வாங்கப்போகும் வசவுமொழிகள், நாளை மறுநாள் நடக்க இருக்கும் மாதிரி நேர்முகத்தேர்வு, தோழியின் பிறந்த நாள், ஆய்வுக்கட்டுரை சமர்ப்பணங்கள், வேகாத தோசை, குழைந்த சேமியா... எதைச்சொல்ல எதை விட..??


எனது காலைப்பொழுதின் முதல் ஒரு மணி நேரத்திற்காக காலை நடைப்பயிற்சியும், தடிமனான புத்தகங்களும் போட்டி போட, இறுதியில் சோம்பலே வெல்லும். அவசரக்கதியில் கிளம்பி Servlet, Server களோடு முட்டி மோதி, Semantic Web டோடு போராடி, UML, VC++.. கடவுளே.. 4  மணிக்குப் பிறகு Data Structures, DBMS, Operating Systems, Networking, Verbal, Non-Verbal, Aptitude, Soft Skills... ஸ்ஸ்ஸ்.. அப்பப்பா.. யாருப்பா இந்த R. S. Aggarwal.?? கடுப்பேத்தறாங்க மை லார்ட்.. :(

Shame Shame ஆ இருந்த வகுப்பு அறிவிப்பு பலகை கூட, இப்போதெல்லாம் எங்களைப்பார்த்து கலர் கலர் ராய் சிரிக்கிறது..


இது மட்டுமா?? Certifications, extra-credit, Paper Presentation, Seminar, Conference.. கூட்டுக் குடும்ப  மளிகை கடை லிஸ்ட் மாதிரி முடியவே முடியாது. 


இவற்றிற்கு நடுவில், யு டியூபில் சரவணன்-மீனாட்சி, புதிதாய் வர இருக்கும் சூர்யா-ஜோதிக காபி விளம்பரம், போத்திஸ் இன் புதிய சல்வார்கள், சிவகார்த்திகேயன் புது படம், ஆர்யா வின் அடுத்த பட முன்னோட்டம், யுவனின் புது ஆல்பம், சமீபத்திய கிசு கிசுக்கள், ப்ளாக் பதிவுகள், Facebook/G+ status update, Antivirus update, இதுக்கு நடுவில் எங்கள் அறிவை வேறு அப்டேட் பண்ணனுமாம்.. "ஆத்தா சத்தியமா நான் பாஸ் ஆகமாட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்.."


இவ்வளவு கஷ்டப்பட்டு படிச்சும் கிடைக்கவில்லையே என்றால்,  interview இல் வேலை என்பது 'அதிஷ்டம்' இருந்தால் மட்டும் என்பார்கள் பாருங்க.. டென்ஷன் ஏ ஆகாது.. இதை முதலிலேயே சொல்லியிருந்தால் தாயத்தோ, மோதிரமோ, தங்கப்பல்லோ, ராசிக்கல்லோ முயன்று பார்த்திருப்போம். பிரேம்ஜி பாணியில் சொல்லணும் னா, "என்ன கொடும சார் இது..??!!", சிம்பு பாணியில் சொல்லணும் னா, "என்ன வாழ்க்க டா இது.."கடவுளே, அடுத்த ஜென்மம் என்று ஒன்று இருந்தால், என்னை கம்ப்யூட்டர் ஆகக்கூட படைத்து விடு, கம்ப்யூட்டர் படிக்கும் மாணவனாக மட்டும் படைத்து விடாதே.. போதும் டா சாமி..15 கருத்துகள்:

 1. ////இவற்றிற்கு நடுவில், யு டியூபில் சரவணன்-மீனாட்சி, புதிதாய் வர இருக்கும் சூர்யா-ஜோதிக காபி விளம்பரம், போத்திஸ் இன் புதிய சல்வார்கள், சிவகார்த்திகேயன் புது படம், ஆர்யா வின் அடுத்த பட முன்னோட்டம், யுவனின் புது ஆல்பம், சமீபத்திய கிசு கிசுக்கள், ப்ளாக் பதிவுகள், Facebook/G+ status update, Antivirus update, இதுக்கு நடுவில் எங்கள் அறிவை வேறு அப்டேட் ////பண்ணனுமாம்.. "ஆத்தா சத்தியமா நான் பாஸ் ஆகமாட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்.."////
  பண்ணுவது வெட்டி வேலை தாங்கள் பெயில் ஆவதற்கு தங்கள் ஆத்தாவை இழுத்திருப்பது அதிகம்!!!
  மிகவும் எதார்த்தமான வரிகள்!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. விடுங்க.. அப்பப்ப ஆத்தாவையும் நெனச்சுக்க வேண்டியது தான்..

   நீக்கு
 2. எல்லாரும் இதையே சொன்னா எந்த Field அ தான் தேர்ந்தெடுப்பது?

  பதிலளிநீக்கு
 3. பேசாமல் எல்லாரும் வாங்க, விவசாயம் பண்ணலாம்..

  பதிலளிநீக்கு
 4. அறிவை மட்டுமே கொண்டு நகரும் வாழ்க்கை எவ்வளவு கொடுமையானது என்பதை ஒரு இதயமுள்ள பெண்ணாய் அனுபவிக்கிறீர்கள்..

  பிறருக்காக நீங்கள் இதை சகித்துகொள்வது பெருமையான விஷயம், ஆனால் பிறர் என்ன முயன்றாலும் உங்களை, இந்த சிவரஞ்சனியை Replace செய்ய முடியாது என்பதை மறந்துவிடாதீர்கள்...

  பிறரின் பேச்சுக்கும், பாராட்டுக்குமே வாழ்க்கையை தொலைக்க இருந்து, அதை கொஞ்சம் கொஞ்சமாய் மீட்டுகொண்டிருக்கிறேன்..

  பிறர் நாவில் இல்லை நம் வாழ்க்கை, இன்று புகழ்பவர்கள் நாளை இகழவும் செய்வார்கள், அவர்களுக்காக நாம் நம்மை, நாம் விரும்பும் அழகிய, எளிமையான வாழ்வைத் தொலைத்தே ஆகவேண்டும் என்கிற கட்டாயமில்லை..

  யோசிக்கவும்,
  நன்றி..!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தாங்கள் சொல்வது உண்மையையே.. நமக்குப் பிடித்த பல விஷயங்கள் பல சமயம் சலிப்பாகவே தோன்றும்.. அந்த தருணத்தில் எழுதப்பட்ட பதிவாதனால் சலிப்பு மிஞ்சியே இருக்கலாம்..
   இது நான் விரும்பி ஏற்கும் வாழ்க்கைமுறையும் கூட.. நெடுஞ்சாலையில் போகும் விரைவுப்பயணம் போல.. அதிலும் சந்தோஷங்கள் பொதிந்து கிடக்கின்றது தானே..?!

   நீக்கு
 5. உண்மைதான்.. சந்தோஷங்கள் இல்லாத இடமே இல்லை என்றே சொல்வேன் நான், அது நெடுஞ்சாலையாக இருந்தாலும் சரி, ஒரு ரோலர் கோஸ்டராக இருந்தாலும் சரி..

  ஆனால், சந்தோஷத்தை தேடுகிறோம் என்பதையே மறந்துவிடும் அளவுக்கு Super-distractive-ஆக இருக்கிறது, இப்பொழுதைய மனிதனின் மனம்.

  எதாவது ஒன்றுக்குள் தலையைவிட்டுகொண்டு, அய்யோ அம்மா என்று அலறுவதே அவனுக்கு வாடிக்கையாகிவிட்டது, அப்படி எதுவும் இல்லை, கவலைப்பட எதுவுமே இல்லை என்றால் அதை நினைத்தும் கவலைகொள்ளும் அளவுக்கு கவலை-அடிக்ட் ஆகிவிட்டோம் நாம்.

  இதையெல்லாம் தாண்டி எப்பொழுதும் தெளிவாய், தேர்ந்தெடுத்த வாழ்க்கைமுறையில் சந்தோஷத்தை அடைந்து, அதை பிறரோடு பகிர்தலில் தான் மனித வாழ்வு முழுமையடைகிறது.

  அந்த தெளிவை தக்கவைத்துகொள்ள உங்களால் முடிகிறதெனில் உங்கள் வாழ்க்கைமுறை சரியானதே..!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தாங்கள் சொல்வது உண்மையே..
   தெளிவான வாழ்க்கை என்று எண்ணியே இந்த பந்தயத்தில் நானும் ஓடுகிறேன்...
   மிதமான சந்தோஷத்துடனும் நெஞ்சம் முழுக்க திருப்தியும் வாழ்க்கை முழுக்க பகிர்தலும் நிச்சயம் இருக்கும் என்றே நம்புவோம்..
   ஏனெனில், நம் வாழ்க்கை.. நம் கையில் தானே?!

   நீக்கு