வியாழன், டிசம்பர் 09, 2010

சிணுங்கல்கள்... ; )

நீ தான் ௮ழைக்கிறாய்
என்று தெரிந்தே சிணுங்குகிறது
என் கைபேசி...

நம் கொஞ்சல்களின் சாரலில்
நனைய கெஞ்சுகிறது ௭ன்னிடம்...

௨ன் அர்த்தமற்ற கேலிகளின்
அர்த்தங்களை அதற்கு எப்படி புரிய வைப்பேன்....???


௭ன்னவனுக்காக…..


உன் கண்களை நேராய் சந்திக்கத்
துடிக்கும் என் கண்கள் - தானாய்
அலைபாயும் உன் முச்சு காற்றை
மிக அருகில் சுவாசித்த உடனே ..

உன் தோள் சேர த்துடிக்கும் என் தோள்கள்
தானாய் தடுமாறும் உன் சட்டை பட்டனை
மிக அருகில் சந்தித்த உடனே..

உன் கை கோர்கத் துடிக்கும் என் கைகள்
தானாய் தடுமாறும் உன் மோதிரத்தின் ஸ்பரிசம்
பட்ட உடனே..

ஏதேதோ பேசத்துடிக்கும் ௭ன் இதழ்கள்
தானாய் தடுமாறும் 'ஏதாவது பேசுடி’
௭ன்று சொல்லும் உன் செல்லத் திட்டலில்..

என் உணர்வுகளோடு போராடி
தினம் தினம் தோற்றுப் போகிறேனே…
நீ மட்டும் எப்படி என்னை வெல்கிறாய் ??? !!

வியாழன், செப்டம்பர் 23, 2010

ஊடகமா? பூடகமா?

பாரதியார் பாடல்கள் கூட
விரசமாகிறது
பனியன் கம்பெனி விளம்பரம்
பார்த்த மாணவனுக்கு...

திரை படங்கள் கூட
வெறுத்து விடுகின்றது
அப்பட நாயகியின்
பேட்டியை கண்ட இளமைக்கு...

உறவுகளின் பெருமை கூட
மறந்து விடுகிறது
நெடுந்தொடர் பார்க்கும்
இல்லத்தரசிகளுக்கு...

புத்தகங்கள் கூட
வெறுமையாகி விடுகின்றது
அதன் அட்டைப் படங்களைக்
கண்ட முதுமைக்கு...

இது தான்
ஊடக உத்தியோ?