வியாழன், செப்டம்பர் 23, 2010

ஊடகமா? பூடகமா?

பாரதியார் பாடல்கள் கூட
விரசமாகிறது
பனியன் கம்பெனி விளம்பரம்
பார்த்த மாணவனுக்கு...

திரை படங்கள் கூட
வெறுத்து விடுகின்றது
அப்பட நாயகியின்
பேட்டியை கண்ட இளமைக்கு...

உறவுகளின் பெருமை கூட
மறந்து விடுகிறது
நெடுந்தொடர் பார்க்கும்
இல்லத்தரசிகளுக்கு...

புத்தகங்கள் கூட
வெறுமையாகி விடுகின்றது
அதன் அட்டைப் படங்களைக்
கண்ட முதுமைக்கு...

இது தான்
ஊடக உத்தியோ?