வெள்ளி, ஜூலை 29, 2011

நம்ம ஊரும் மொபைல் போனும் :)

 நம்ம ஊருகள்-ல பாத்திங்கன்னா நான்-ஸ்டாப்-ஆ ஒளிசுட்டே இருக்கற விஷயங்கள் இரண்டு..
 • பண்பலை 
 • கை பேசி யாகிய  செல் போன் 
பெரும்பாலும் நோக்கியா டோன் தான், சில சமயம் "சரவணப் பொய்கையில் நீராடி.." னு பரவசத்தோட ஒலிக்கும். 'அல்லோ' னு தெக்காலா பாத்து பேச ஆரம்பிச்சாங்கன்ன, 'கேக்குல கண்ணு'-னு கஸ்டமர் கேர் அக்கா கிட்டையே ஒரு நிமிஷம் பேசுவாங்க. பேசற சத்தத்துல தென்ன மரத்து காக்கா, குருவி கூட பயந்து ஓடும். அது பதிவு பண்ணப்பட்ட குரல் னு அப்புறம் தான் புரியும். கம்பெனி காரன் னு அசட்டு சிரிப்பு சிரிச்சுட்டு போவாங்க பாருங்க, கொள்ளை அழகு..!!


மாட்டுக்கு கறவை போடறாங்களோ இல்லையோ, தினமும் 15 நிமிஷம் சார்ஜ் 
கரெக்ட் -ஆ போட்ருவாங்க. வயல் வேலை செய்யும்போதெல்லாம் பொறி காகிதத்துல பேக் பண்ணி  முண்டாசுல வச்சுப்பாங்க.

அதுலயும் அந்த ஸ்பீட் டயல் - னு ஒரு அம்சம் இருக்கு பாருங்க,
1 - பொண்ணு வீட்டுக்கு 
2 - மாபிள்ளைக்கு
3 - மகனுக்கு 
4 - பேத்திக்கு.. னு காலெண்டர் ல எழுதி வச்சு மனபாடம் பண்ணி, நர்செரி ரைம்ஸ் மாதிரி அடிகடி சொல்லி காட்டிட்டே இருப்பாங்க, அதுல ஒரு சந்தோசம்.. : ) . அது கரெக்ட் ஆ வேலை செய்யுதா  னு டெஸ்ட் கால் வேற பண்ணி பாப்பாங்க. 


பண்ணயத்து வேலை ஆளுகளுக்கு எல்லாம் போன் வாங்கி கொடுத்து, 'தண்ணி பாஞ்சா மோட்டார் - அ நிறுத்திட்டு வா, மாட்டுக்கு தட்டு  போட்டியா ??,  செவல மாடு தண்ணி குடிச்சுதா??, வெள்ளாட்ட நல்லா கட்டுனியா??, கோழிய அடைச்சிரு...." னு நம்ம ஆளுக போடற உத்தரவு இருக்கே.. வேலை வாங்கறதுல பில் கேட்ஸ் நம்ம கிட்ட பிச்சை கேக்கணும்..

போன் வாங்கின புதுசுல எங்க ஐயா (அப்பா வின் அப்பா), "இதுவும் மோட்டார் விடுற மாதிரி தான், பச்சைய அழுத்தினா பேசலாம், செவப்புன்னா நிறுத்திற்லாம்" னு சொன்னது இன்னும் என் காதுல ஒலிசுட்டே இருக்கு..

போன் பேசவே மாட்டேன் னு பிடிவாதமா இருந்த எங்க ஆத்தா (அப்பா வின் அம்மா), ஒரு நாள் மருத்துவ மனை ல அட்மிட் ஆனப்ப, எனக்கு போன் போட்டு தர சொல்லி பேசின நாளை நான் இன்னும் "மறக்க முடியாத" நாள் னு என் டைரி ல குறிச்சு வச்சுருக்கேன். இப்ப எல்லாம் வாரத்தில் 3 முறை பேசிடுவேன்.

இத படிக்கற நெறைய பேர், அவங்க தாத்தா கோ, பாட்டி கோ, போன் வாங்கி குடுத்திருபீங்க, அடிக்கடி சந்தோஷமா பேசுவிங்க.. என்ன தான் சொன்னாலும், அவங்க ளோட வெகுளி பேச்சும், மழலை பேச்சு தாங்க..4 கருத்துகள்:

 1. நம்ம ஊரு கொங்குத்தமிழ் கொள்ளை அழகு...
  " பெரும்பாலும் நோக்கியா டோன் தான், சில சமயம் "சரவணப் பொய்கையில் நீராடி.." னு பரவசத்தோட ஒலிக்கும். 'அல்லோ' னு தெக்காலா பாத்து பேச ஆரம்பிச்சாங்கன்ன, 'கேக்குல கண்ணு'-னு கஸ்டமர் கேர் அக்கா கிட்டையே ஒரு நிமிஷம் பேசுவாங்க. "----- மிக எதார்த்தம்!

  என்றும் உன் ரசிகையாய், உன் தோழியாய்...

  "நான்"

  பதிலளிநீக்கு
 2. எங்க பக்கத்து வீட்டு பாட்டு கூட ஒரு முறை "இந்தா எப்பம்(FM)கண்ணூ உன்னோட சில்லு நம்பர குடு" னு கேட்டுச்சு...எனக்கே சிரிப்பு வந்துடுச்சி.. நாடு முன்னேறிடுச்சி, நம்ம‌ ஊரு பெருசுகளுகளும் முன்னேறிட்டாங்க...

  பதிலளிநீக்கு