....
" அப்பொழு திலும் என் கண்ணீர் துளிகளைத்
தாங்கிட உன் கரங்கள் நீண்டபோது - அதை
நான் என்ன வென்று சொல்ல...??
சிறு பிள்ளையாய் உன் அருகாமைக்கும்
பச்சிளம் குழந்தையாய் உன் அரவணைபிற்கும்
ஏங்குவதை வெக்கத்தை விட்டு எப்படி சொல்வேன்??
வரிவரியாய் பதித்து விட்ட என் ஆசைகளையும் கனவுகளையும்
என் காதலையும் உன் அருகில் கவிதைகளாய்
படித்து காட்டவே எத்தனை முறை தவித்திருப்பேன்..
உன் கண்ணில் படும்படி வைத்துவிட்டு
நீ படிப்பதற்காக திருட்டுத்தனமாய் கவனித்திருப்பேன்..
நீ கவனிக்காமல் செல்லும்போதும்
ஏமாறிய இதயம் வலித்தாலும்
இதமாகத்தான் இருந்தது...
அந்த வெள்ளை காகிதத்தில் முழுமையாய்
நிறைந்திருந்தது நீ மட்டுமே - என்
இதயம் போல..
இப்படி சின்னச்சின்ன ஏமாற்றங்களை
வேண்டுமென்றே நீ தந்துவிட்டு..
மொட்டை மாடி இருளில் பனி மட்டுமே
ஊடுருவ முடியும் இடைவெளியில்
உன் காதருகே படிக்கச் சொல்லி ரசிப்பாயே..
இப்படி சுகமான நினைவுகளுடன்
தினம் தினம் செத்து பிழைக்கவே விழைகிறேன்..
*******
நோட் : திஸ் பார்ட் இஸ் டெடிக்கேடேட் டு அவர் செகண்ட் செமஸ்டர் தியரி, பிரக்டிகல், ஆடிட் அண்ட் அதர் கோர்செஸ்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக