என்று தெரிந்தே சிணுங்குகிறது
என் கைபேசி...
நம் கொஞ்சல்களின் சாரலில்
நனைய கெஞ்சுகிறது ௭ன்னிடம்...
௨ன் அர்த்தமற்ற கேலிகளின்
அர்த்தங்களை அதற்கு எப்படி புரிய வைப்பேன்....???


'கலி முதி போச்சு'
'எல்லாம் இதுகள பெத்தவங்கள சொல்லணும்'
'வர வர கோவிலுக்கும் வர முடியறது இல்ல'
'இதுக்கு எதாவது சட்டம் கொண்டு வரணும்
''அது தேவை இல்ல, சட்ட சீர்திருத்தம் கொண்டு வரணும்'
* * * * *
அது வேறு ஒன்றும் இல்லை...
விடுமுறை அல்லாத ஒரு நாளில்
என் நான்கு வயது மூத்த அண்ணனோடு கோவிலுக்கு சென்றிருந்தேன்...
மிகவும் எதார்த்தமாக என் நெற்றி குங்குமத்தை சரி செய்தான்...
அதற்கு சாடுகிறதா இந்த சமூகம்?????