வியாழன், ஆகஸ்ட் 20, 2009

விழி மூடி யோசிக்கிறேன் ...

உனக்காகவே வளர்ந்து விட்ட என் விரல் நகங்கள் ...

உனக்கான என் முத்தங்களை சுமந்த நீ தைத்த சட்டையின் பொத்தான்....

என் பிடியில் சிக்கி தவிக்கும் உன் மூச்சு காற்றை சுமந்த என் தலையணை..

குளியல் அறையில் இருந்தும் சமையல் அறையில் இருந்தும் நீ எனக்கு அனுப்பிய ரகசிய குறுந்தகவல்கள் .....

இவை யாவும்
அந்நிய காற்றில் கரையாதிருக்க...
அடிக்கடி சிணுங்கும் என் கைபேசி உன் குரலிலேயே ....

இப்படி நீயும் உன் நினைவுகளும் மாறி மாறி என்னை ஆக்ரமிக்க
அந்நிய தேசத்தில் என்ன செய்வேன் நான் ??????

திங்கள், பிப்ரவரி 23, 2009

இதற்கு பெயர் என்னவோ...???

அலுவலக கடவுசொல் உன் பெயர்..
மின்அஞ்சல் கடவுசொல் உன் பெயர்...
கோவிலில் அர்ச்சனைக்கும் உன் பெயர்..
என் குறிபேட்டில் உன் பெயர் ...
என் நினைவிலும் உன் பெயர்..
என் நாவிலும் உன் பெயர்...
இப்படி பெயரளவில் உன்னை நான் நேசிக்க
நீயோ மனதளவில் வேறு ஒருவனை நேசிக்கிறாயே....

திங்கள், டிசம்பர் 29, 2008

சரி சமமாம் .....

அவன் டாஸ்மாக்-இல்
சாராயம் குடிக்கிறான் ...
இவள் ஒழுகும் வீட்டில்
புளிச்ச கஞ்சி குடிக்கிறாள்..

அவன் சிகரெட்
புகையில் வாழ்கிறான்...
இவள் அடுப்பு
புகையில் நோகிறாள்...

அவன் வீராப்பில்
மனைவியை அடிக்கிறான்...
இவள் வெறுப்பில்
மகனை அடிக்கிறாள்..

இப்போது சொல்லுங்கள்
ஆணும் பெண்ணும் சரி நிகர்
சமம் தானே???

சனி, டிசம்பர் 20, 2008

மெ(மி)ன் பொருள் யுகம்..

இருபது இரண்டாம் நூற்றாண்டு..
இளம் கம்ப்யூட்டர் விஞ்ஞானியின்
வீடு...
அதிகாலை எழுந்தான்..
அந்த நேரத்தில் கூட
செடியில் பூக்கள் வாடி வதங்கின...
வாடிய பூக்களை
கண்டதும் வாடினான் ..
சென்று மின் விசையை அழுத்தினான்...
மின்சார துடிப்புடன் மலர்ந்தன அந்த (மின்)பூக்கள்...

இளைய தலைமுறை !!!

களை எடுத்து காப்பேரிய
கைகளை பார்த்து பேத்தி
சொன்னாள்...
"உங்க மெஹந்தி ரொம்ப
ஷ்டைலிஷ் - ஆ
இருக்கு பாட்டி... !!"