இது தான் தைரியம் என்று கற்றுக்கொடுத்த எஸ்.எஸ்.வி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தைரியத்துடன் வாழ்க்கையை இப்படித்தான் அமைத்துக்கொள்ள வேண்டும் என்று வகுத்துக்கொடுத்த வேளாளர் மகளிர் கல்லூரி, எனது பிரகாசமான வாழ்கைக்கு வழி வகுத்துக்கொடுக்கும் பண்ணாரி அம்மன் தொழில் நுட்பக்கல்லூரி.. விரலைப்பிடித்தும் தலையில் குட்டியும் என் வாழ்க்கைப்பயணத்தில் என்னுடன் வந்த ஆசான்கள், என்னை வழிநடத்திச்சென்ற நல்ல மேய்ப்பாளர்கள்.
எனது கல்லூரி வாழ்க்கையின் கடைசி பக்கத்தில் இருக்கிறேன் நான். ஒரு சிறிய ஆனால் நிறைய கற்றுக்கொடுத்த ஒரு மகளிர் கல்லூரியிலிருந்து வந்து, இரு பாலர் சேர்ந்து படிக்கும் ஒரு பிரபலமான பொரியியல் கல்லூரியில் சேர்ந்த போது மிரண்டு தான் போனேன். என் பழைய கல்லூரியில் காணாத, கேட்டேயிராத புதிய புதிய விதிமுறைகள். மகளிர் கல்லூரியில் சுதந்திரமாய் சுற்றித்திரிந்த எனக்கு, சக மாணவர்கள் எல்லாரும் லிங்குசாமி பட வில்லன்கள் போலத்தெரிந்தனர். நாளடைவில், வெகுவிரைவில் பழகித்தான் போனேன். வகுப்பில் பரிச்சயம் ஆகாதவர்கள் கூட Facebook-கிலும், Google+ - சிலும் பரிச்சயமாயினர்.
![]() |
எங்க college |
![]() |
எங்க department |
![]() |
எங்க hostel |
ஒரே கலரில் ஆடை அணிந்து வந்தால் ‘Same sweet', புத்தாடை அணிந்து வந்தால் ‘New pinch', ஆடை நிறத்திற்கு மெட்ச் ஆகவே தேர்ந்தெடுத்துக்குடிக்கும் தெனீர்க்கோப்பை, வகுப்பு நடக்கும் வேளையில் ஏதாவது ஒரு பாடலில் நடு வரியை சொல்லி, முதல் வரியைக் கண்டுபிடித்து விளையாடுவது, கலர் கலராய் அழி ரப்பர் கள், பொம்மை பேனாக்கள், பல கடிகள் வாங்கிய நெல்லிக்காய், chocobar, லாலிபாப்,எலந்த வடை, கொய்யா, மாங் காய், ஒவ்வொரு கவுண்டரிலும் ஒவ்வொரு அப்பளம் வீதம் 3 * 1 =3 (+1 complimented by friends ), ஆக மொத்தம் அசால்டாக 4 அப்பளங்கள் சாப்பிட்டது என்று குழந்தைத்தனமாக வாழ்ந்த் வாழ்க்கை முடியப்போகிறதா?
முதல் வருடத்தில் இருந்த ஒரு பக்கா professional engineering வகுப்புகளை, மூன்றாம் வருடத்தில் கலைக்கல்லூரிகளினும் மிஞ்சிய கொண்டாட்டமாக மாற்றிய பெருமை எல்லாம் எங்களையே சேரும்.வகுப்பிற்கே உல்லன் நூலும், ஊசியும் கொண்டு வந்து பின்னுவதாகட்டும், வகுப்புகளில் Sidney Sheldon , Chetan Bhagat நாவல்கள் படிப்பதாகட்டும், லேப்-ல் கல்கி, ரமணி சந்திரன் நாவல்கள் படிப்பதாகட்டும், ரங்கோலி, மெஹந்தி போடுவதாகட்டும்.. கல்லூரி வாழ்க்கையை இவ்வளவு அழகாய் எவரால் அலங்கரித்திருக்க முடியும்?
படிப்பிலும் சோடை பொய் விடவில்லை நாங்கள். விளையாட்டாய் படித்து அசால்ட்டாய் மதிப்பெண்கள் எடுப்போம். Chetan Bhagat சொல்லும் ‘Five point someone' கள் அல்ல நாங்கள், ‘Eight point all ones" !

பொய் சொல்வதில் கற்றுக்கொண்ட creativity, வகுப்பும் கவனித்துக்கொண்டு SMS-ம் அனுப்பிக்கொண்டு உல்லன் நூலில் பிண்ணிக்கொண்டும், அரட்டை அடித்துக்கொண்டு சமாளித்த போது multi-tasking, பீட்டர் விடுவதில் கற்றுக்கொண்ட corporate-english, periodicals கற்றுக்கொடுத்த just-like-that பாலிசி, செமெஸ்டர்-ன் போது பழகிய hard-work, பத்தே நிமிடத்தில் எழுதிய assignment - ம், ஒரே நாளில் முடித்த record-களும் சொல்லுமே Intel i7 - னொடு போட்டி போட்ட எங்கள் வேகத்தை...... இனி இந்த வாழ்க்கைப் பாடங்களை யார் கொடுக்கப் போகிறார்கள்?!!
வாழ்க்கையின் அர்த்தத்தை உணர்த்திய பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக்கல்லூரிக்கும், என் வாழ்க்கைப் பக்கங்களை அழகாக்கிய என் நண்பர்களுக்கும் சிறப்பு சமர்ப்பணங்கள். :)